என்னையாடா கலாய்ச்சீங்க!.. வேறலெவலில் களம் இறங்கும் லெஜெண்ட் சரவணா!..

By :  MURUGAN
Published On 2025-07-14 20:30 IST   |   Updated On 2025-07-14 20:30:00 IST

Legend saravana: துணிக்கடைகளில் பிரபலமானது சரவணா ஸ்டோர்ஸ். இதன் நிறுவனர் செல்வரத்தினத்தின் மகன் சரவணா. துவக்கத்தில் சரவணா ஸ்டோர்ஸ் தொடர்பான விளம்பரங்களில் இவரின் புகைப்படங்களை பார்க்க முடிந்தது. திடீரென சினிமா ஹீரோ போல உடையணிந்து அவரே விளம்பர படங்களிலும் நடிக்க துவங்கினார். அதுவும் அவருடன் தமன்னா, ஹன்சிகா போன்ற நடிகைகள் நடனமாடினார்கள்.

எனவே, அந்த விளம்பர படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. தன்னை லெஜெண்ட் சரவணா என புரமோட் செய்து கொண்டார். பலரும் அவரை ட்ரோல் செய்தார்கள். அப்படி நெகட்டிவ் பப்ளிசிட்டி மூலம் பிரபலமான சரவணாவுக்கு சினிமாவில் நடிக்கவும் ஆசை வந்தது.


அவருடன் ஜோடியாக நடிக்க தமன்னா, ஹன்சிகா, நயன்தாரா என பலரிடமும் கேட்டார்கள். ஆனால், அவர்கள் யாரும் முன்வரவில்லை. எனவே, மும்பையிலிருந்து ஒரு நடிகையை கொண்டு வந்து நடிக்க வைத்தார்கள். விளம்பர படங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரியே இப்படத்தை இயக்கினார்கள். அப்படி வெளியான லெஜெண்ட் படம் ட்ரோலில் சிக்கியது.

சரவணாவின் மேக்கப், அவரின் உடல் மொழி, வசனம் பேசும் ஸ்டைல் என எல்லாவற்றையும் ட்ரோல் செய்தார்கள். இதையெல்லாம் சரவணாவும் புரிந்துகொண்டார். தற்போது காக்கி சட்டை, கொடி, கருடன் போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார்.


இந்த படத்தில் லெஜெண்ட் படத்தில் என்னவெல்லாம் ட்ரோல் செய்தார்களோ அது எல்லாவற்றையும் சரி செய்திருக்கிறார்களாம். சரவணாவின் உடல் மொழி, வசனம் பேசும் ஸ்டைல், நடிப்பு எல்லாவற்றையும் துரை செந்தில் குமார் மாற்றியிருக்கிறாராம். ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியிருக்கும் இப்படத்தின் முதல் பாதியை சமீபத்தில் பார்த்திருக்கிறார்கள். படம் சிறப்பாக வந்திருப்பதால் படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது. இந்த முறை லெஜெண்ட் சர்வணா ட்ரோலில் சிக்கமாட்டார் என்றே கணிக்கலாம். இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் என அண்ணாச்சி ஒரு விழாவில் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News