கூலி படத்துக்கு எதுவுமே வேணாம்!. சன் பிக்சர்ஸ் எடுத்த முடிவு!. தக்லைப்தான் காரணமா?!...

By :  MURUGAN
Published On 2025-07-18 22:14 IST   |   Updated On 2025-07-18 22:14:00 IST

Coolie: ஒரு படம் ரசிகர்களை சென்றடைய வேண்டுமெனில் அதை சரியான முறையில் விளம்பரம் செய்ய வேண்டும். முன்பெல்லாம் நோட்டீஸ் கொடுப்பார்கள். போஸ்டர் ஒட்டுவார்கள். பேப்பர்களில் விளம்பரம் செய்வார்கள். இதில் நோட்டீஸ் தவிர மற்ற இரண்டும் இப்போதும் இருக்கிறது. அதேநேரம் சமூகவலைத்தளங்களில் அதிக அளவில் புரமோஷன் செய்கிறார்கள்.

ஏனெனில், எல்லோரின் கையிலும் ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிவிட்டர் போன்ற சமூகவலைத்தளங்களில் பலரும் இருக்கிறார்கள். எனவே, அவற்றில் அதிக அளவில் புரமோஷன் செய்கிறார்கள். புதுப்பட அறிவிப்பு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவற்றை இதில்தான் வெளியிடுகிறார்கள். அதேபோல், பாடல் வெளியீடு, கிளிம்ப்ஸ் வீடியோ, டீசர் மற்றும் டிரெய்லர் வீடியோ என எல்லாவற்றையும் யுடியூப்பில் வெளியிடுகிறார்கள்.


எனவே, படத்தின் புரமோஷன் என்பதே சமூகவலைத்தளங்கள் வழியாக மட்டுமே அதிகம் நடக்கிறது. இதன் மூலம் படத்தின் பிளஸ் என்றாலும் அதுவே படத்திற்கு எமனாக மாறும் அபாயம் இருக்கிறது. ஓவர் ஹைப் ஏறும்போது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு உருவாகும். அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்திசெய்யவில்லை எனில் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் அதிக அளவில் வரும். அதுவே படத்தின் வசூலையும் பாதிக்கும்.

சமீபத்தில் வெளியான தக் லைப் படத்திற்கு இதுதான் நடந்தது. அதிக அளவில் புரமோஷன் செய்யப்பட்டு ஹைப் ஏறியது. ஆனால், படத்தின் கதை ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றில் பலரும் படத்தை கலாய்த்து மீம்ஸ் போட்டார்கள். இதுவரை மீம்ஸ்க்குள் வராத மணிரத்னமும் மீம்ஸில் வந்தார்.


எனவேதான், கூலி படத்திற்கு அதிக அளவில் புரமோஷன் செய்ய வேண்டாம் என லோகேஷும், சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறனும் முடிவெடுத்திருக்கிறார்களாம். ஆகஸ்டு 14ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில் 2ம் தேதி ஒரே ஒரு டிரெய்லர் வீடியோவை மட்டுமே வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். வழக்கமாக ரஜினி படம் என்றால் ஆடியோ லான்ச் நடக்கும். அதில் ரஜினி பேசுவது ஹைலைட்டாக மாறி அதுவே புரமோஷனாக மாறும். ஆனால், கூலிக்கு அதுவும் வேண்டாம் என முடிவு செய்திருக்கிறார்களாம்.

ஆகஸ்டு 2ம் தேதி செய்தியாளர்களை அழைத்து டிரெய்லரை மட்டும் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்களாம். லோகேஷ் லியோ படத்தை இயக்கிய போது இப்படித்தான் ஹைப் உருவானது. இதுவே லோகேஷுக்கு பிரஸ்ஸரை கொடுத்தது. இதனால், படம் கலவையான விமர்சனத்தை கொடுத்தது. கூலியில் இது நடக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக இருக்கிறாராம்.

Tags:    

Similar News