கமல், ரஜினி, விஜயை விட இவர்தான் பெரிய நடிகரா? இவ்ளோ ஓப்பனா சொல்லிட்டாரே லோகேஷ்

ரஜினி,கமல், விஜய் என பெரிய நடிகர்களுடன் வேலை செய்துவிட்டு இப்போது மீண்டும் கார்த்தியுடன் இணைகிறீர்களே? அது உங்களுக்கு சஞ்சலமாக இல்லையா என்ற ஒரு கேள்வியை லோகேஷ் கனகராஜ் முன்பு வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த லோகேஷ் என்னை பொறுத்தவரைக்கும் முதன் முதலில் என்னை நம்பி ஒரு பெரிய ஸ்கேலில் படம் கொடுத்தவர் கார்த்திதான்.
அதனால் என்னுடைய மனசுக்கு பெரிய ஹீரோ கார்த்திதான். அவர் நம்பிய பிறகுதான் மற்ற எல்லாமே நடந்தது. அதனால் நான் tier 1, tier 2 என்ற மதிப்பீட்டிற்குள்ளேயே போகவில்லை. தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர்களில் அதுவும் தவிர்க்க முடியாத நடிகராக கார்த்தி இருக்கிறார். இருந்தாலும் வியாபாரிகள் பார்வை எப்படி இருக்குமோ என்று பார்த்தாலும் கூட கைதி படம் பண்ணும் போது 100 கோடி கிளப்பில் அந்தப் படம் இணைந்தது.
அதற்கு முக்கியமான காரணமாக இருந்தது கார்த்தியின் உழைப்பு. அதனால் கிட்டத்தட்ட அப்படி ஒரு பெரிய வெற்றியை கைதி 2க்கும் கிடைக்கும் என நான் நம்புகிறேன் என லோகேஷ் கூறியிருக்கிறார். கமலின் தீவிர ரசிகராக லோகேஷ் இருந்தாலும் தன்னை முதலில் நம்பியை கார்த்தியை மிக முக்கியமான அந்தஸ்தில் வைத்துதான் லோகேஷ் பார்க்கிறார்.
அவருடைய இயக்கத்தில் கூலி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறது. ஏற்கனவே லியோ படம் எதிர்பார்த்த விமர்சனத்தை பெறாவிட்டாலும் கூலி படத்தில் ரஜினி இணைந்திருப்பதால் பெரிய ஹைப் இந்தப் படத்திற்கு இருக்கிறது. கூலி திரைப்படம் அப்படி வெற்றியடைந்தால் அது அடுத்து அவர் எடுக்கும் கைதி 2 படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

karthi
கைதி 2 படத்திற்கு முன்பு அவர் அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க போகிறார். அதுவும் கேங்ஸ்டர் திரைப்படமாகத்தான் அந்தப் படம் உருவாக போகிறது. அதற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைகள் எல்லாம் அவர் கற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது.