‘கைதி 2’ இப்படித்தான் இருக்கும்! LCUவில் யாரெல்லாம் வர்றாங்க? சஸ்பென்ஸை உடைச்ச லோகேஷ்

by Rohini |
kaithi2
X
kaithi2

இன்னும் ஒரு சில நாள்களில் கூலி படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது. லோகேஷ் ரஜினி காம்பினேஷனில் படம் பிரம்மாண்டமாக இருக்கும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு பேன் இந்தியா படமாக பெரிய பெரிய மல்டி ஸ்டார்கள் நடித்துள்ள திரைப்படம். பிற மொழிகளில் இருக்கும் சூப்பர் ஸ்டார்கள் எல்லாரும் இந்தப் படத்தில் இருப்பதால் ரஜினியின் கூலி படமாவது 1000 கோடியை அடிக்குமா என்றும் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த ஒரு பெரிய எதிர்பார்ப்பும் லோகேஷுக்கு பிரஷராக இருக்கும். ஆனால் 1000 கோடியை எதிர்பார்த்து படம் எடுக்கவில்லை. ஆனால் அப்படி கலெக்ட் செய்தால் சந்தோஷம் தான் என ஒரு பேட்டியில் லோகேஷ் கூறினார். இந்த நிலையில் கூலி படத்திற்கு பிறகு கொஞ்சம் பிரேக் எடுத்துக் கொண்டு அடுத்து லோகேஷ் கைதி 2வைத்தான் கையில் எடுக்க போகிறார். கைதி 2 படம் எப்படிப்பட்ட படமாக இருக்கும் என்பதையும் லோகேஷ் பகிர்ந்திருக்கிறார். இதோ அவர் கூறியது:

கைதி படம் ஆரம்பிக்கும் பொழுது எல்சியு, யுனிவர்ஸ் அந்த விஷயங்கள் எல்லாம் நினைக்கவே இல்லை. அது எல்லாமே மக்கள் கொடுத்தது தான். கைதி படத்தில் கடைசி சீன் பார்க்கும் பொழுது ஜெயிலுக்குள் உட்கார்ந்து ‘தில்லி யாருன்னு எனக்கு தெரியும்’ என சொல்வது போல முடித்திருப்போம். அந்த ஐடியாவில் கைதி 2வை ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் முதல் பாகத்தை முடித்தோம் .

அந்த படத்தில் மூன்று விஷயங்களை சொல்லாமல் இருந்தோம் . தில்லி பத்து வருஷம் உள்ளே இருந்தார் என்று மட்டும் தானே தெரியும், அதற்கு முன் என்ன பண்ணாருனு தெரியாதுல, இதிலிருந்து கைதி 2வை ஆரம்பிக்கலாம் என்ற ஐடியாவில் இருந்தோம். அதன் பிறகு விக்ரம் படம் பண்ணும் போது கைதி படத்தில் உள்ள கேரக்டர்கள் எல்லாம் வரும்பொழுது மக்கள் எல்சியு எனக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.

இப்போது அந்த கதை மட்டும் இல்லாமல் அதன் கிளை கதைகளாக தொடர்ச்சி கதைகளாக விக்ரமில் இருக்கும் கேரக்டர்ஸ், லியோ படத்தில் இருக்கிற கேரக்டர்ஸ் எல்லாம் சேர்ந்து வருகிற மாதிரி தான் கைதி 2வை உருவாக்க போகிறோம் .இது ஒரு நல்ல இன்ட்ரஸ்டிங்கான ஐடியாவாக இருந்தது. ப்ரீ புரொடக்ஷன் இன்னும் ஆரம்பிக்கவில்லை. ஆனால் கதையாக 30 லிருந்து 35 பக்கங்களுக்கு அதன் உருவாக்கத்தை எழுதி விட்டேன். இப்போ கூலி ரிலீஸ் ஆன பிறகு அடுத்து ஒரு நாள் கைதி2 படத்தை ஆரம்பிக்க இருக்கிறேன் என லோகேஷ் கூறியிருக்கிறார்.

Next Story