ரஜினினாலே அதுதான்! இதுவரை மிஸ் ஆச்சு! ஆனால் கூலி படத்துல மிஸ் ஆகாது.. அப்போ அது உறுதி

by Rohini |
coolie
X

coolie

ரஜினி சினிமாவில் நுழைந்து கிட்டத்தட்ட 50 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். இது மிகப்பெரிய சாதனை. ஏனெனில் ஹீரோவுக்கு உண்டான எந்த தகுதியும் இல்லாமல் சினிமாவிற்குள் எண்ட்ரி ஆன ரஜினி இன்று ஒட்டுமொத்த கோலிவுட்டுக்கும் சூப்பர் ஸ்டாராக மாறியிருக்கிறார் என்றால் அது சாதாரண விஷயமே கிடையாது. அதனால் திறமை இருந்தால் கண்டிப்பாக ஜெயித்துவிடலாம் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணமாக இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த்.

அபூர்வ ராகங்கள் படத்தில் துணை நடிகராக தன் திரை வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினி வில்லன், துணை நடிகர், இரண்டாவது ஹீரோ, நடிகர் என படிப்படியாக தன்னுடைய திரைப்பயணத்தை கடந்தார். பைரவி திரைப்படத்தில்தான் முதன் முதலில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் ரஜினி. அந்தப் படத்தில் அவருடைய நடிப்பு பிரமிக்க வைத்தது. அதிலிருந்தே இன்று வரை ஹீரோவாகவே ஜொலித்து வருகிறார்.

அதோடு மட்டுமில்லாமல் பல தலைமுறைகளை கடந்த நடிகராகவும் திகழ்கிறார். எத்தனை இளம் தலைமுறை நடிகர்கள் வந்தாலும் இன்று ரஜினியின் படம் பாக்ஸ் ஆஃபிஸில் பட்டையை கிளப்பி வருகிறது. சம்பளத்திலும் அவர்தான் நம்பர் ஒன் நடிகராக இருக்கிறார். ரஜினியின் நடிப்பில் அடுத்து ரிலீஸாக கூடிய திரைப்படம் கூலி. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி , நாகர்ஜூனா, அமீர்கான், சத்யராஜ் என பல நடிகர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஒரு பேன் இந்தியா படமாக கூலி படம் தயாராகியிருக்கிறது. ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கின்றது. அதனால் படத்தை புரோமோஷன் பண்ணும் வேலையில் தற்போது படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். பல பேட்டிகளில் கூலி படத்தை பற்றி பேசி வருகிறார். அவர் ஒரு பேட்டியில் கூறும் போது ரஜினினாலே ரஜினிதான்.

ஆனால் ரஜினி சாரி சமீபகால படங்களில் அவருக்கே உரித்தான ஹியூமர் , ஆக்‌ஷன் என சில விஷயங்கள் மிஸ் ஆகியிருந்தது. அதை மீண்டும் பழைய படி தன் படத்தின் மூலம் கொண்டு வந்தவர் கார்த்திக் சுப்பராஜ். பேட்ட படத்தில் அதை சரியாக பண்ணியிருந்தார். அப்படித்தான் கூலி படத்திலும் படமுழுக்க ரஜினிக்கே உரித்தான அந்த விஷயங்களை நானும் செய்திருக்கிறேன் என லோகேஷ் கூறியிருக்கிறார்.

Next Story