‘பராசக்தி’ படத்தில் வில்லனா நடிக்க வேண்டியது! மிஸ் ஆன காரணத்தை கூறிய லோகேஷ்

parasakthi
தற்போது லோகேஷ் கனகராஜின் பேட்டிதான் டிரெண்டிங்கில் இருந்து வருகின்றது. பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். பல யூடியூப் சேனல்கள் போட்டி போட்டுக் கொண்டு அவரை பேட்டி எடுத்து வருகின்றனர். இதை கூலி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கூட உட்கார்ந்து கொண்டு பார்த்தேன், படுத்துக் கொண்டு பார்த்தேன், தூங்கி எழுந்தும் பார்த்தேன். ஆனால் பேட்டி முடியவில்லை என ரஜினி மிகவும் தமாஷாக பேசியிருந்தார்.
அந்தளவுக்கு பல மணி நேரம் லோகேஷின் பேட்டி அமைந்தது. தற்போது கூலி படத்தை எடுத்து முடித்துவிட்டு அடுத்ததாக கைதி 2 படத்தை கையில் எடுக்கிறார் லோகேஷ். லோகேஷ் என்றாலே பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அவர் எடுத்த எல்லா படங்களிலும் ஒரு வித எதிர்பார்ப்பை வைத்து விடுகிறார். அப்படித்தான் கூலி படத்திற்கும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.
கூலி படத்தை பொறுத்தவரைக்கும் எல்லாருக்கும் உள்ள வருத்தம் என்னவெனில் படத்திற்கு ஏ சர்டிஃபிக்கேட் கொடுத்ததுதான். 18 வயதிற்குட்பட்டவர்கள் கூலி படத்தை பார்க்க முடியாது என்றுதான் புலம்பி வருகின்றனர்.இந்த நிலையில் பராசக்தி படத்தில் தான் நடிக்க இருந்த ஒரு தகவலை லோகேஷ் பகிர்ந்திருக்கிறார். லியோ படத்திற்கு பிறகே லோகேஷ் ஹீரோவாக நடிக்க போகிறார் என்ற ஒரு பேச்சு இருந்து வந்தது.
அப்படி வெளியானதும் பல பேர் அவரை அணுகியிருக்கிறார்கள். அப்படித்தான் பராசக்தி படக்குழுவும் லோகேஷை அணுகினார்களாம். அதுவும் அந்தப் படத்தில் வில்லன் கேரக்டருக்கு அழைத்திருக்கிறார்கள். சுதா கொங்கரா கதை சொன்னதும் லோகேஷுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம். சிவகார்த்திகேயனும் ‘ நீங்கள் நடிச்சா நன்றாக இருக்கும்.’ என்று கூறியிருக்கிறார்.
ஆனால் கூலி படத்தில் பிஸியாக இருந்ததனால்தான் பராசக்தி படத்தில் நடிக்க முடியவில்லை. கூலி ரிலீஸ் தேதியே இப்போதுதான் வரப்போகிறது. இதற்கு இடையில் பராசக்தி படத்திலும் கூலி படத்திலும் மாறி மாறி இருப்பது நன்றாக இருக்காது. அதனால் நான் நடிக்கவில்லை என்று லோகேஷ் கூறினார். ஆனால் அடுத்து அருண்மாதேஸ்வர் இயக்கத்தில் ஒரு கேங்ஸ்டர் திரைப்படத்தில் லீடு ரோலில் நடிக்க இருக்கிறார் லோகேஷ்.