கூலி படத்தில் கமல்?!.. லோகேஷ் கனகராஜ் நினைப்பது நடக்குமா?!.. செம அப்டேட்!..
Coolie: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் என்பதை விட இந்த படத்தில் ரஜினி ஹீரோவாக நடித்திருப்பதுதான் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு, இந்த படத்தில் சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர், உபேந்திரா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
அதோடு, பாலிவுட் நடிகர் அமீர்கான் ஒரு கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார். அனேகமாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் அவர் வருவார் என கணிக்கப்படுகிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். வழக்கமாக லோகேஷ் கனகராஜ் கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருளை மையமாக வைத்து கேங்ஸ்டர் படங்களைத்தான் எடுப்பார்.
கூலி படத்தில் தங்க கடத்தலின் பின்னணியில் இயங்கும் கேங்ஸ்டர்கள், அதை தடுக்க நினைக்கும் ரஜினி என கதையை அமைத்திருக்கிறார் லோகேஷ். எனவே, பக்கா ஆக்ஷன் கேங்ஸ்டர் படமாக கூலி உருவாகியுள்ளது. இந்த படத்தில் கமலின் மகள் ஸ்ருதிஹாசனும் நடித்திருக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்தின் 2 பாடல்களை படக்குழு வெளியிட்டது. இதில், மோனிகா பாடலுக்கு பலரும் நடனம் ஆடி ரீல்ஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்கள். எனவே, இந்த பாடல் டிரெண்டிங்கில் இருக்கிறது. கூலி படத்தின் 3வது பாடலான பவர்ஹவுஸ் இன்று இரவு 9 மணிக்கு வெளியானது.
இந்நிலையில், கூலி படத்தில் கமலை கொண்டு வரும் முயற்சியில் லோகேஷ் இறங்கியிருக்கிறாராம். இப்படத்தின் ஷூட்டிங்கெல்லாம் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் படத்தின் துவக்கத்தில் கமலின் குரலை பயன்படுத்தலாம் என்கிற ஆசை அவருக்கு வந்திருக்கிறதாம். இதை ரஜினியிடம் சொல்லி அவரும் ஓகே சொல்லிவிட்டால் அடுத்து லோகேஷ் கமலை அணுகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஜினியும், கமலும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் இது நடப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்படுகிறது.