கூலியில் நடக்காத விஷயம்… லோகேஷின் மாஸ்டர் ஸ்கெட்ச்… உள்ளே வரும் முக்கிய நடிகை!..

Lokesh: இயக்குனர் லோகேஷ் கனகராஜின் கூலி திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தற்போது இன்னொரு ஆச்சரிய அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

ஹாலிவுட் படம் போல ஒரு படத்தின் தொடர்பு இன்னொரு படத்தில் இருப்பதே மிகப்பெரிய ஆச்சரியமாக இருக்கும். இது தமிழில் நடக்குமா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எல்சியூவை மையமாக வைத்து லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களை இயக்க தொடங்கினார்.

கமல்ஹாசனின் விக்ரம், விஜயின் லியோ படங்கள் ஒன்றை ஒன்று தொடர்புடையதாக அமைந்தது. இதை தொடர்ந்து, லோகேஷ் இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் கூலி படத்திலும் இந்த கனெக்சன் இருக்குமா என எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் ரஜினிகாந்த் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டார்.

இதனால் கூலி திரைப்படம் தனியாக தான் இருக்கும் என ஆரம்பிக்கும் முன்னரே அறிவிக்கப்பட்டு விட்டது. இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, தன்னுடைய எல்சியூவை மிஸ் பண்ண விரும்பாத லோகேஷ் மீண்டும் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார்.

இப்படத்தின் கதையை லோகேஷ் எழுதி இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படத்தினை லோகேஷ் தயாரிக்க இருக்கிறார். பென்ஸ் எனப் பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை பாக்கியராஜ் கண்ணன் இயக்க இருக்கிறார்.

ராகவா லாரன்ஸ் நடிக்க இருக்கும் இப்படத்தில் ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. விரைவில் இப்படத்தின் ஷூட்டிங் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles
Next Story
Share it