கூலி ரிலீஸானதும் எஸ்கேப் ஆயிடுவேன்!.. எனக்கு இதெல்லாம் வேணாம்!.. லோகேஷ் ஒப்பன்....

Coolie: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற படங்களை இயக்கி ரசிகர்களிடம் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். விஜயை வைத்து இரண்டு படங்களை இயக்கியவர் என்பதாலும் கமலை வைத்து விக்ரம் எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்தவர் என்பதாலும் கவனிக்கப்படும் இயக்குனராக மாறிவிட்டார்.
அதோடு லோகேஷின் படங்களுக்கென தனி ரசிகர் கூட்டமும் உருவாகியுள்ளது. ரஜினியே இவரின் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்துவிட்டார். இந்த படத்திற்காக கடந்த 2 வருடங்களாக கடுமையாக உழைத்திருக்கிறார் லோகேஷ். என்னுடைய 36 மற்றும் 37 என இரண்டு வயதையும் கூலி எடுத்துக்கொண்டது என சொல்லியிருக்கிறார்.
இந்த படத்திற்கு பெரிய அளவில் புரமோஷன் செய்யப்படவில்லை. ஏனெனில், ஓவர் ஹைப்பை உருவாக்கி அதுவே படத்திற்கு எமனாக மாறிவிட்டால் என்ன செய்வது என லோகேஷ் நினைக்கிறார். ஏனெனில், அவர் லியோ இயக்கியபோது அப்படித்தான் நடந்தது. எங்கு பார்த்தாலும் லியோ பற்றிய பேச்சாகவே இருந்தது. ஆனால், படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.

அதனால் கூலி படத்தை பார்த்து பார்த்து செதுக்கி இருக்கிறார் லோகேஷ். கூலி படம் துறைமுகம், அதில் நடக்கும் கடத்தல்கள் சம்பந்தப்பட்ட கதை. நாகார்ஜுனா வில்லனாக நடிக்க கடத்தல் கும்பலின் டானாக சௌபின் சாஹிர், உபேந்திரா போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள். இதுபோக அமீர்கான் ஒரு முக்கிய கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய லோகேஷ் ‘படம் ஆகஸ்டு 14ம் தேதி வெளியாகிறது. 15ம் தேதி நண்பர்களுடன் நான் வெளிநாட்டுக்கு போய்விடுவேன். இங்கே இருக்க மாட்டேன். இவர்கள் சொல்லும் பாக்ஸ் ஆபிஸ் நம்பரிலிருந்து ஒதுங்கியிருக்கவே விரும்புகிறேன்’ என சொல்லியிருக்கிறார்.
மேலும், கூலி படம் 1000 கோடி வசூல் செய்யும் என நான் சொல்ல மாட்டேன். 150 ரூபாய் கொடுத்து டிக்கெட் வாங்கும் ரசிகனை திருப்திப்படுத்துவதுதான் என் வேலை. அதை கூலி படம் செய்யும். 1000 கோடி வசூல் செய்தால் அதை என் டீமுக்கு கிடைத்த வெற்றியாக பார்ப்பேன்’ எனவும் சொல்லியிருக்கிறார்.