வாழைக்கு அமைஞ்சது லப்பர் பந்துக்கு அமையலயே!.. வெற்றியிலும் ஒரு சோகம்!....

Lubber pandhu: ஒரு படம் நல்ல படமாக, ரசிகர்களிடம் வரவேற்பை பெறும் படமாக, நல்ல வசூலை பெறும் படமாக அமைய வேண்டும். அதை விட எந்த நேரத்தில் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஒரு நல்ல படமாக இருந்தாலும் தவறான நேரத்தில் ரிலீஸ் செய்தால் படம் ஓடாது.

உதாரணத்திற்கு சென்னையில் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கும் போது எவ்வளவு பெரிய நடிகர் படம் வந்தாலும் தியேட்டரில் கூட்டம் இருக்கிறது. விஜயின் கோட் படம் ஆந்திராவில் வெளியான போது அங்கு தொடர் மழை பெய்து கொண்டிருந்தது. அதனாலேயே அந்த படம் ஆந்திராவில் வசூலை பெறவில்லை.

சூர்யாவின் சிங்கம் 3 படம் வெளியான போது சென்னையில் அடைமழை பெய்து கொண்டிருந்தது. சில படங்கள் வெளியாகும் நேரம் திரையுலகில் எதாவது ஸ்டிரைக் என சொல்லி தியேட்டரில் படம் போட மாட்டார்கள். இதனால் வெற்றி அடைய வேண்டிய படம் கூட தோல்வியை சந்திக்கும். இதுவும் சில படங்களுக்கு நடந்திருக்கிறது.


கடந்த 20ம் தேதி வெளியான திரைப்படம்தான் லப்பர் பந்து. இந்த படத்தை தமிழரசன் பச்சைமுத்து என்கிற அறிமுக இயக்குனர் இயக்கியிருந்தார். கிரிக்கெட்டை மையமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது. எல்லா கிராமம் மற்றும் நகரங்களிலும் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்கள் ஒரு குழுவாக செயல்படுவார்கள்.

அடிக்கடி கிரிக்கெட் போட்டியும் நடக்கும். அதில், ஈகோ-வுடன் பலரும் விளையாடுகிறார்கள். அப்படி சிலரின் ஈகோவை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியிருக்கிறார் தமிழரசன் பச்சை முத்து. இந்த படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் வெற்றிமாறன் போன்ற சில இயக்குனர்களும் பாராட்டியிருக்கிறார்கள்.

இதுவரை இந்த படம் 8 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இது படக்குழுவினருக்கு மகிழ்ச்சி என்றாலும் அதிலும் ஒரு சோகம் ஏற்பட்டிருக்கிறது. இந்த படத்தோடு கடைசி உலகப்போர், நந்தன், தோழர் சேகுவேரா, கோழிப்பண்ணை செல்லதுரை உள்ளிட்ட 8 படங்களும் வெளியானது.

எனவே, லப்பர் பந்து படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கவில்லை. வாழை படம் தனியாக வந்ததால்தான் 30 கோடி வரை வசூலை அள்ளியது. இது லப்பர் பந்துவுக்கு அமையவில்லை. தனியாக வந்திருந்தால் இதுவரை 15 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்திருக்கிறார்கள் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். ஆனாலும், இப்படத்திற்கு இப்போது தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டிருப்பதால் வசூல் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.

Related Articles
Next Story
Share it