5 நாட்களில் இவ்வளவு கோடி வசூலா?!.. பாக்ஸ் ஆபிசில் கலக்கும் லப்பர் பந்து!....
இப்போதெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆனாலே அது எவ்வளவு வசூல் என எல்லோரும் பார்க்க துவங்கிவிடுவார்கள். ஆனால், அதை பற்றி கவலைப்படுபவர் தயாரிப்பாளர் மட்டுமே. அல்லது அதுபற்றிய தகவலை தெரிந்து வைத்திருப்பவரும் அவர் மட்டுமே. ஆனால், மூவி டிராக்கர்ஸ் என்கிற பெயரில் பலரும் புதிய படங்களின் வசூல் பற்றி பேசுகிறார்கள்.
குறிப்பாக உண்மைக்கு புரம்பான தகவல்களை சொல்கிறார்கள். அதிலும், விஜய், அஜித், ரஜினி போன்ற பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் முதல் நாளிலேயே 100 கோடி வசூல் என அடித்துவிடுகிறார்கள். ஆனால், அதில் பெரும்பாலும் உண்மை இருக்காது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியான கோட் படம் 500 கோடி வசூலை கூட தொடவில்லை என்றே சொல்கிறார்கள்.
ஆனால், சில சமயம் எந்த எதிர்ப்பும் இல்லாமல் வெளியாகும் சில சின்ன படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று நல்ல வசூலை பெற்றுவிடும். அப்படித்தான் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது 20ம் தேதி இப்படம் வெளியானது.
அந்த தேதியில் பல படங்கள் வெளியானாலும் லப்பர் பந்து படத்திற்கு நேர்மறையான விமர்சனங்களை பெற்றது. கிரிக்கெட்டை மையமாக வைத்து இதுவரை பல திரைப்படங்கள் வெளியாகியிருக்கிறது. அதில் சில படங்கள் மட்டுமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது.
லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷ் மற்றும் ஹரிஸ் கல்யாண் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும், இப்படத்தில் நடித்திருக்கும் எல்லோருமே சிறப்பாக நடித்திருப்பதாக பலரும் சொன்னார்கள். குறிப்பாக, விஜயகாந்த் ரசிகரான இப்படத்தின் இயக்குனர் தமிழரசன் பச்சைமுத்து பல இடங்களில் விஜயகாந்தின் பாடல்களை பயன்படுத்தி இருக்கிறார்கள்.
இந்நிலையில், இந்த படம் வெளியாகி 3 நாட்களில் ஐந்தரை கோடி வரை வசூல் செய்திருப்பதாகவும், அதன்பின் 2 நாட்களும் நல்ல வசூலை பெற்றதால் இதுவரை 8 கோடி வரை வசூல் செய்திருக்கலாம் என சொல்கிறார்கள். அதனால், இந்த படத்திற்கு இப்போது தியேட்டர்களும் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.