8 நாட்களை கடந்தும் ஹவுஸ்புல்… லப்பர்பந்து படத்தின் வசூல் நிலவரம்!..

Lubbar panthu: ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் வெளிவந்து இருக்கும் லப்பர்பந்து படத்தின் வசூல் நிலவரம் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் தமிழரசன் பச்சமுத்து இயக்கி இருக்கும் திரைப்படம் லப்பர்பந்து. இப்படத்தில் ஹரிஷ் கல்யாண், தினேஷ், சஞ்சனா, ஸ்வாசிகா, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஷேன் ரால்டன் இசையமைப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை குவித்தது.

கிரிக்கெட் படத்தில் சொல்ல வந்த விஷயத்தை விட்டு வேறு கதைக்கு தாவிவிடுவார்கள். ஆனால் லப்பர்பந்து அதை சரியாக செய்து இருப்பதாக கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்து இருக்கிறார். தொடர்ந்து நிறைய பிரபலங்களும் லப்பர்பந்துக்கு அப்ளாஸ் தட்டி வருகின்றனர்.

இப்படம் செப்டம்பர் 20ந் தேதி திரைக்கு வந்தது. இப்படம் தொடர்ந்து நல்ல விமர்சனங்களை குவித்து வருகிறது. இதனால் தியேட்டர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதுவரை இப்படம் 11 கோடி வரை வசூல் செய்து இருக்கிறதாம்.

எட்டு நாட்களை இப்படம் கடந்து இருக்கும் நிலையில் திரையரங்கில் இன்னமும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஒளிபரப்பட்டு வருகிறது. அதிலும் முன்னணி நடிகர்களின் படங்களான தேவாரா, மெய்யழகன் நேற்று ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில் இந்த நிலை நீடிப்பது தான் ஆச்சரியமான விஷயமாகி இருக்கிறது.

Related Articles
Next Story
Share it