பெக்கரையும், பிரதரையும் காலி செய்த லக்கி பாஸ்கர்!.. துல்கர் சல்மான் இப்பாடி மாஸ் காட்டிட்டாரே!..
Lucky baskar: இந்த தீபாவளிக்கு 4 திரைப்படங்கள் வெளியானது. சிவகார்த்திகேயனின் அமரன், கவினின் பிளடி பெக்கர், ஜெயம் ரவியின் பிரதர் ஆகிய தமிழ் படங்கள் வெளியானது. அதோடு, தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டு வெளியான படம்தான் லக்கி பாஸ்கர். இந்த படத்தில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இதில், அமரன் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஏனெனில், கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இப்படம் உருவாகியிருக்கிறது. அதோடு, இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் உண்மை இதை இது.
எனவே, இப்படத்தில் நல்ல வசூல் இருக்கிறது. முதல் நாளில் மட்டும் இப்படம் தமிழ்நாட்டில் 13 கோடி வரை வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. ஜெயம் ரவியின் பிரதர் படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லை. ஏனெனில் இந்த படத்திற்கு புரமோஷனே செய்யப்படவில்லை.
கவினின் பிளடி பெக்கர் படம் ஒரு டார்க் காமெடி படம் என சொல்லப்பட்டது. ஆனால், ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை இப்படம் ஏற்படுத்தவில்லை. எனவே, வசூலும் குறைவாகவே உள்ளது. இந்நிலையில்தான், துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் 150 தியேட்டரில் படம் வெளியான நிலையில் இப்போது 100 தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. அந்த 100 தியேட்டர்களிலும் திரையிடப்பட்டிருந்த பிளடி பெக்கர் மற்றும் பிரதர் படங்கள் தூக்கப்பட்டு லக்கி பாஸ்கரை போட்டிருக்கிறார்கள். அந்த அளவுக்கு லக்கி பாஸ்கர் படத்திற்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.
பொதுவாக படம் வெளியாவதற்கு முதல் நாள் செய்தியாளர்கள் மற்றும் சினிமாவை சேர்ந்தவர்களுக்கு படத்தை திரையிட்டு காட்டுவார்கள். அதை பிரீமியர் என சொல்வார்கள். ஆனால், அதுவே டிக்கெட் போட்டு பார்க்க வைத்தால் அது பெய்டு பிரீமியர் என சொல்வார்கள். சூர்யாவின் ஏழாம் அறிவுக்கு அப்படி செய்யப்பட்டது. அதன்பின் லக்கி பாஸ்கரை அப்படி திரையிட்டிருக்கிறார்கள். சுமார் 59 ஸ்கிரீனில் இப்படம் ஒளிபரபப்பட்டது. இதுவே, படத்திற்கு நல்ல புரமோஷனாக அமைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.