கேம் சேஞ்சருக்கு ரெட்டா?!. முடிஞ்சா செஞ்சிப்பாரு!.. மீசையை முறுக்கும் தில் ராஜூ!...

by Murugan |
game changer
X

கேம் changer

Game Changer: ஒரு திரைப்படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுப்பதைத்தான் சினிமா உலகில் ரெட் கார்ட் என சொல்வார்கள். அதேபோல், ஒத்துழைக்காத நடிகர், நடிகர்களுக்கும் ரெட் கார்ட் போடப்படும். வடிவேலுக்கு 4 வருடங்கள் ரெட் கார்டு போடப்பட்டிருந்தது. அதன்பின்னர் ரெட் கார்டு நீக்கப்பட்டு அவர் நாய் சேகர் படத்தில் நடித்தார்.

ரெட் கார்டு என்கிற வார்த்தை அடிக்கடி செய்திகளில் அடிபடும். சினிமாத்துறையில் ஒருவரை பணிய வைக்கவே இந்த ரெட் கார்டை பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் அது செய்தியோடு நின்றுவிடும். நடைமுறைக்கு வராது. தற்போது இந்த பஞ்சாயத்து கேம் சேஞ்சருக்கும் வந்திருக்கிறது. ஷங்கருக்கும், லைக்காவுக்கும் இடையே பல வருடமாக பஞ்சாயத்து இருக்கிறது.


இந்தியன் 2 துவங்கிய போது இந்த பிரச்சனை துவங்கியது. இந்தியன் 2-வை முடித்துகொடுக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்கக்கூடாது என லைக்கா நிறுவனம் நீதிமன்றத்துக்கு போனது. அதை சட்டரீதியாக எதிர்கொண்டார் ஷங்கர். அதன்பின் அது பேசி தீர்க்கப்பட்டு இந்தியன் 2 படம் உருவானது.

இந்தியன் 2 உருவானபோது இந்தியன் 3 படத்தின் பல காட்சிகளையும் ஷங்கர் எடுத்துவிட்டார். ஆனால், இந்தியன் 2 படம் ஓடவில்லை. எனவே, கமலே இந்தியன் 3 மீது ஆர்வம் காட்டாமல் இருக்கிறார். அதோடு, ‘நான் சொல்வது போல இன்னும் சில காட்சிகளை எடுத்து படத்தில் சேர்த்தால் மட்டுமே நான் கால்ஷீட் கொடுப்பேன்’ என அவர் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.

எனவே, ஷங்கரும் யோசித்துகொண்டே இருக்கிறார். ஆனால், இந்தியன் 3-வை எப்படியாவது ரிலீஸ் செய்துவிட வேண்டும் என லைக்கா விரும்புகிறது. ஆனால், ஷங்கர் பிடி கொடுக்கவில்லை. வருகிற 10ம் தேதி ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படம் உலக முழுவதும் வெளியாகவுள்ளது. தமிழிலும் இப்படம் வெளியாகவுள்ளது. எனவே, தயாரிப்பாளர் சங்கம் மூலம் இந்த படத்திற்கு ரெட் கார்டு போடும் முயற்சியில் லைக்கா நிறுவனம் இறங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.


இப்படி செய்தால் ‘இந்தியன் 3 படத்தை சீக்கிரம் முடித்து கொடுக்கிறேன்’ என ஷங்கர் சொல்வார் என லைக்கா எதிர்பார்க்கிறது. ஆனால், இது தெரிந்தும் கேம் சேஞ்சர் பட தயாரிப்பாளர் தில் ராஜூ அலட்டிக்கொள்ளவில்லையாம். ஏனெனில், ‘இது லைக்காவுக்கும், ஷங்கருக்கும் இடையே உள்ள பிரச்சனை. இதில் எப்படி என் படத்தின் மீது கை வைப்பார்கள்?’ என்பதே அவரின் நிலைப்பாடாக இருக்கிறது.

அதோடு, தெலுங்கு சினிமாவையே கையில் வைத்திருப்பவர் தில் ராஜூ. அவரை கோபப்படுத்தினால் ஒரு தமிழ் படம் கூட ஆந்திராவில் வெளியாகாது. லைக்கா நிறுவனத்துக்காக தயாரிப்பாளர் சங்கம் மொத்த தமிழ் சினிமாவுக்கும் ஆப்பு வைக்காது என்றும் சொல்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

Next Story