படத்துல சண்டைப் போட்டுக்கிட்டே இருந்த 2 கேரக்டரா இப்படி?.. ’மாமன்’ நடிகைகளின் மறுபக்கம்!..

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கி சூரி ஹீரோவாக நடித்து கடந்த வாரம் வெளியான மாமன் திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் பிக்கப் ஆகி வசூலில் பட்டையைக் கிளப்பி வருகிறது. விமர்சகர்களை கலாய்க்கிறேன் என ஒரு பேய் படத்தைக் கூட உருப்படியாக எடுக்காமல் சந்தானம் சிக்கிக் கொண்டார்.

மாமன் படத்தில் சூரிக்கு அக்காவாக சுவாசிகாவும், மனைவியாக ஐஸ்வர்யா லட்சுமியும் நடித்திருந்தனர். சூரி நடித்த கருடன் படத்துக்கே ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில், மாமன் படத்துக்கும் ஆல் ஏரியாவிலும் ஆதரவு கிடைத்து வருகிறது.

இதுவரை மாமன் திரைப்படம் 10 கோடிக்கும் அதிகமான வசூலை கடந்துள்ளது. 2வது வாரமும் படம் திரையரங்குகளில் ஓடும் என்றும் அதிகபட்சமாக 20 கோடி வரை படத்துக்கு வசூல் வரும் என்றும் கூறுகின்றனர்.

மாமன் படத்தில் அக்காவாக நடித்த சுவாசிகா மற்றும் மனைவியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி இருவரும் குடுமிபுடி சண்டையை மட்டும் தான் போடவில்லை. அதற்கு பதிலாக, அனைத்து விதமான சண்டைகளையும் போட்டுள்ளனர்.

இருவரையும் பார்த்தாலே பரம எதிரிகள் போலவே நடித்துள்ளனர். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் இருவரும் எந்தளவுக்கு அரட்டை அடித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் கட்டியணைத்து சிரித்துக் கொண்டிருக்கின்றனர் பாருங்கள் என BTS புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை தலைமீது கை வைக்க செய்துள்ளன.