வணங்கானை காலி செய்த மதகஜ ராஜா!.. அருண் விஜய்க்கு எமனாக வந்த விஷால்!..
Madha gaja raja: தமிழ் சினிமாவில் 40 வருடங்களுக்கும் மேல் குணச்சித்திர நடிகராக நடித்து வரும் விஜயகுமாரின் மகன் அருண் விஜய். 30 வருடங்களுக்கு முன்பு அருண் குமார் என்கிற பெயரில் சினிமாவில் அறிமுகமானார். இவர் அறிமுகமான முறை மாப்பிள்ளை படத்தை இயக்கியர் சுந்தர் சி.
அருண் விஜய்: அதன்பின் பல படங்களிலும் ஹீரோவாக நடித்தார். ஆனாலும் அவரால் முன்னணி நடிகராக மாறமுடியவில்லை. இத்தனைக்கும் நன்றாக நடிப்பார்.. நன்றாக நடனம் ஆடுவார். ஆனாலும், சரியான வாய்ப்பு கிடைக்காமல் நடித்து வந்தார். மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடித்த தடையற தாக்க படம் பேசப்பட்டது. ஒருகட்டத்தில் தனது பெயரை அருண் விஜய் எனவும் மாற்றிக்கொண்டார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக நடிக்கும் வாய்ப்பு வரவே அதை சரியாக பயன்படுத்திக்கொண்டார் அருண் விஜய். இந்த படத்தால் அவருக்கு அஜித் ரசிகர்களின் ஆதரவும் கிடைத்தது. குற்றம் 23, செக்க சிவந்த வானம், தடம், யானை போன்ற படங்கள் இவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது. சில படங்கள் தோல்வியையும் சந்தித்தது.
வணங்கான் வாய்ப்பு: இந்நிலையில்தான், பாலாவின் இயக்கத்தில் உருவான வணங்கான் படத்தில் நடித்துக்கொண்டிருந்த சூர்யா விலகிவிட அருண் விஜய் உள்ளே வந்தார். இயக்குனர் பாலா என்பதால் இந்த படம் பேசப்படும் என்பதை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் அருண் விஜய். பிதாகன் படத்தில் வரும் சியான் விக்ரமை போல வணங்கான் படத்தில் வாய் பேச முடியாத, காது கேட்காத வேடம் இவருக்கு.
கடந்த 10ம் தேதி கேம் சேஞ்சர் படத்துடன் இப்படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்றது. பாலா இது நல்ல கம்பேக் என்றும் சிலர் சொன்னார்கள். படத்தை பார்த்த ரசிகர்களும் படத்தை பாராட்டி பேசினார்கள். எனவே, வணங்கான் படத்திற்கு தியேட்டர்களில் கூட்டம் அதிகரிக்க அருண் விஜயும் மிகவும் சந்தோசப்பட்டார்.
மத கஜ ராஜா: இந்நிலையில்தான், சுந்தர் சி இயக்கத்தில் விஷால் - சந்தானம் நடித்து கடந்த 12ம் தேதி வெளியான மத கஜ ரஜா படம் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று தியேட்டர்களில் கூட்டம் அலை மோதுகிறது. பொங்கலுக்கு ஏற்ற படமாக இது அமைந்திருக்கிறது. குடும்பத்துடன் ஜாலியாக பார்த்து சிரித்துவிட்டு வரலாம் என்பதால் இப்படத்தை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் வணங்கான் படத்திற்கு வசூல் குறைந்துவிட்டது. 4வது நாளான நேற்று இப்படம் தமிழகத்தில் 1.5 கோடியை வசூல் செய்திருக்கிறது. தமிழகத்தில் இப்படம் இதுவரை 8.5 கோடியை வசூல் செய்திருக்கிறது.
ஆனாலும், இந்த வாரம் முழுவதும் விடுமுறை என்பதால் இப்படத்தின் வசூல் அதிகரிக்குமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.