விஜயின் அந்தப் பாடலை பாடியது மதன் பாபு மகனா? சூப்பர் ஹிட் பாடலாச்சே

நேற்று பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாபு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட காலமானார். இந்த செய்தி திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. எப்பொழுதுமே சிரித்துக் கொண்டே இருக்கும் மதன் பாபு அவருடைய மரணத்தில் தான் சிரிக்காமல் இருப்பதை பார்க்க முடிந்தது. அவருக்கு வயது 71. நடிகர் என்பதையும் தாண்டி ஆரம்ப காலங்களில் ஒரு இசை கலைஞராகவும் இருந்திருக்கிறார் மதன் பாபு.
புற்றுநோய் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நகைச்சுவை வேடங்களிலும் நடித்திருக்கிறார். இவரை சினிமாவில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் கே. பாலச்சந்தர். திருடா திருடி, காதலா காதலா, ஆசை, தேவர் மகன், பிரண்ட்ஸ், பூவே உனக்காக என பல நடிகர்களின் படங்களில் இவருடைய கதாபாத்திரம் பேசும்படியாக அமைந்திருக்கின்றன.
தமிழ், தெலுங்கு ,மலையாளம் என 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். டிவி சீரியல்களிலும் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார். இவருக்கு சுசீலா என்ற மனைவியும் அர்ஷித் என்ற மகனும் ஜனனி என்ற மகளும் இருக்கின்றனர். இவருடைய மகன் மகள் இருவருமே பின்னணி பாடவர்களாக இருந்து வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் இவருடைய மகன் அர்ஷித் விஜய் நடித்த ஒரு படத்தில் பாடலை பாடியிருக்கிறார் என்பது தான்.
விஜய் பாடலில் அனைவருக்கும் பிடித்தமான அதுவும் சூப்பர்ஹிட் பாடலான மதுரைக்கு போகாதடி பாடலை பாடியவர் மதன் பாபுவின் மகன் அர்ஷித் என்பது குறிப்பிடத்தக்கது. இதை ஒரு பழைய பேட்டியில் மதன் பாபுவே மிகப் பெருமையுடன் கூறி இருக்கிறார். மதன்பாபுவை பொறுத்தவரைக்கும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை ஆரம்பத்தில் தொகுத்து வழங்கியவர் மதன்பாபுதான்.