ரஜினியோ, கமலோ இல்லை…. இவர்தான் எனக்கு போட்டி… மம்முட்டிக்கு டஃப் கொடுக்கிறாரே!
Mammotty: பிரபல நடிகரான மம்முட்டி தனக்கு போட்டி இந்த தமிழ் நடிகர் தான் எனச் சொல்லி இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
பொதுவாக ஒவ்வொரு மொழி சினிமா உலகிலும் சில நடிகர்கள் உச்சத்தில் இருப்பார்கள். அப்படி தென்னிந்திய மொழிகளில் தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கமல்ஹாசனை போல மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் தான் அதிக பிரபலம்.
தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் இவர்கள்தான் மிகப்பெரிய அளவில் பிடித்தமான ஹீரோக்களாகவும் இருந்து வருகின்றனர். இதில் மம்முட்டி தனது 73 வயதை கடந்த போதிலும் இன்னுமும் இளவயது நாயகர்கள் போல சுறுசுறுப்பாக தன்னுடைய படங்களில் தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
தமிழில் கூட மம்முட்டி சில படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் கோலிவுட்டில் பேரன்பு திரைப்படத்தில் நடித்த ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். நடிப்பில் மட்டுமல்லாமல் மம்முட்டிக்கு புத்தகம் எழுதுவதும் அதிக விருப்பம்.
அப்படி அவர் எழுதிய மூன்றாம் பிறை புத்தகத்தை தமிழில் எழுத்தாளர் பவா செல்லதுரையின் மனைவி எழுத்தாளர் சைலஜா மொழிபெயர்த்து இருக்கிறார். இந்நிலையில் பவா செல்லத்துரையை நேரில் சந்தித்து மம்முட்டி பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது நடிப்பில் தனக்கு போட்டி ரஜினிகாந்த் கமலஹாசனோ இல்லை. தற்போது பிரபல நடிகராக இருக்கும் குரு சோமசுந்தரம் தான் என்னுடைய போட்டி. அவர் கூத்து பட்டறை இருந்து வந்ததால் நடிப்பில் முதிர்ச்சி காட்டுகிறார்.
மேலும் இவர் மின்னல் முரளி என்ற ஒற்றை மலையாள படத்தில் மட்டுமே இதுவரை நடித்திருக்கிறார். ஆனால் அதில் அவர் காட்டிய மிரட்டல் ஆன நடிப்பு மல்லுவுட் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் கவர்ந்து இன்னுமும் அவர் குறித்து பேசுகின்றனர். அதனால் அவர் தான் தனக்கு போட்டி எனவும் குறிப்பிட்டு பேசியிருந்தாராம்.