நாயகன் மாதிரியான கதையா? ‘தக் லைஃப்’ படத்தை பற்றி ஹிண்ட் கொடுத்த மணிரத்னம்

kamal
நாயகன் படத்திற்கு பிறகு கமலும் மணிரத்னமும் இணைந்துள்ள படம் தக் லைஃப். இந்தப் படத்தில் கமலுடன் சேர்ந்து சிம்பு, திரிஷா, அசோக்செல்வன், அபிராமி என பல நடிகர்கள் நடித்துள்ளனர். கூடவே நாசரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். ஏஅர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணிரத்னம் கமல் இணைகிறார்கள் என்ற செய்தி வெளியானதும் அனைவருமே இன்னொரு நாயகனா என்றுதான் கேட்க ஆரம்பித்தனர்.
ஆனால் இதை பற்றி கமல் முன்பே நாயகன் படத்தில் நடித்த கமலும் அதை இயக்கிய மணிரத்னமும் இப்போது இல்லை என்று கூறியிருந்தார். படத்தின் டிரெய்லர், முதல் படம் இரண்டாவது பாடல் எல்லாம் வெளியாகி படத்திற்கான ஹைப்பை கூட்டியிருக்கிறது. இந்தப் படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாக இருக்கின்றது. படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் படக்குழு இறங்கியிருக்கிறது.
பல யூடியூப் சேனல்களுக்கு தக் லைஃப் டீம் பேட்டி கொடுத்து வருகிறது. எவ்வளவு பெரிய லெஜெண்டாக இருந்தாலும் தன்னுடைய படத்தை தான் தான் நல்ல முறையில் கொண்டு போக வேண்டுமென்பதற்காக சலிக்காமல் பேட்டி கொடுத்து வருகிறார் கமல். இந்த பக்குவம் இன்னும் ரஜினிக்கோ விஜய்க்கோ அஜித்துக்கோ வரவில்லை. எதாவது ஒரு சேனலில் உட்கார்ந்து கொண்டு இவ்வளவு பெரிய நடிகர் பேட்டி கொடுத்ததை யாராவது பார்த்திருக்கிறோமா?
அதுதான் கமல். சினிமாவிற்காக என்ன செய்ய சொன்னாலும் செய்யக் கூடியவர். இந்த நிலையில் ஆனந்த விகடன் பேட்டியில் தக் லைஃப் படத்தை பற்றி மணிரத்னம் கூறிய செய்தி வைரலாகிவருகின்றது. அவர் கூறியது என்னவெனில், நாயகன் மாதிரி இருக்கக்கூடாதுன்னு முடிவு பண்ணினோம். அதே ஜானரில் இருக்கலாம். ஆனால் அதையும் வேறுமாதிரி ஃபீல் பண்ணனும். நான் ஒரு ஐடியா வைத்திருந்தேன்.
kamal
அதை கமல் சார்கிட்டே சொன்னபோது அது எக்ஸ்பென்ஸிவ் என சொன்னார். அதற்கு பிறகு அவர் ஒரு ஸ்கிரிப்ட் செய்திருந்தார். அதில் எனக்கு ஒரு விஷயம் பிடித்தது. அது நாயகனில் இருந்த ஒரு பொறின்னு சொல்லலாம் என மணிரத்னம் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.