அஜீத் பட வாய்ப்புகள் நிறைய வந்தும் மறுத்த இயக்குனர்... அட அவரா? சூப்பர்ஹிட் கொடுத்தாரே!

by Sankaran |   ( Updated:2024-12-22 09:39:57  )
Ajith
X

தமிழ்த்திரை உலகில் 'தல', 'அல்டிமேட் ஸ்டார்'னு புகழாரம் சூட்டப்பட்டவர் அஜீத்குமார். தற்போது எந்தப் பட்டமும் எனக்குத் தேவையில்லை என்று பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டார். கார், பைக் ரேஸ்னு அது ஒரு புறமும், சினிமா ஒரு புறமும் என பிசியாக இருக்கிறார்.

ஆரம்பத்தில் பல சிக்கல்களை சந்தித்து சொந்தக்காலில் நின்று சினிமா உலகில் விடாமுயற்சியுடன் ஜெயித்தவர். அதற்குப் பிரதிபலன் தான் இப்போது அவருக்கு தமிழ்சினிமா உலகம் கொடுத்துள்ள இடம்.

எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி -கமல் ஆகியோருக்குப் பிறகு நாம் யாரைச் சொல்வோம் என்றால் அது அஜீத்-விஜய் தான். இப்போது விஜய் தன் கடைசி படமான தளபதி 69க்குப் பிறகு அரசியலில் முழுமூச்சாக இறங்க உள்ளார். இதனால் அஜீத்துக்குத் தான் வாய்ப்புகள் வந்து குவியும். அவருக்கு இப்போதுள்ள மாஸை விட இன்னும் பல மடங்கு அதிகரிக்கும்.


அஜீத்தை வைத்து மங்காத்தா என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியவர் வெங்கட்பிரபு. அதே போல விஜயை வைத்து சமீபத்தில் கோட் என்ற சூப்பர்ஹிட் படத்தை இயக்கியுள்ளார். வசூலிலும் சாதனையைப் படைத்த படம் இது. அந்த வகையில் தற்போது இவர் அஜீத் குறித்து ஒரு தகவலைத் தெரிவித்துள்ளார். என்னன்னு பார்க்கலாமா...

அஜீத் சார் என் மீது கோபமா இருக்கலாம். மங்காத்தா படத்திற்குப் பிறகு அஜீத் சார் கூட மீண்டும் படம் பண்றதுக்கு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தது. ஆனால் சில பல கமிட்மெண்ட்டுகள் இருந்ததால் என்னால மறுபடியும் பண்ண முடியல. அதனால் கூட அவர் என் மீது கோபமா இருக்கலாம் என்று நினைக்கிறேன் என்கிறார் வெங்கட்பிரபு.


2011ல் வெங்கட்பிரபு அஜீத்தை வைத்து இயக்கிய படம் மங்காத்தா. இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் யுவன் சங்கர் ராஜா. அஜீத்துடன் இணைந்து ஆக்ஷன் கிங் அர்ஜ+ன், திரிஷா, லட்சுமிராய், அஞ்சலி, ஆண்ட்ரியா, வைபவ், மகத், பிரேம்ஜி உள்பட பலர் நடித்துள்ளனர். படம் முழுவதும் காமெடி கலந்து விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக ரசிக்கத்தக்க வகையில் இருக்கும்.

பாடல்களை எடுத்துக் கொண்டால் விளையாடு மங்காத்தா, நீதான், வாடா பின்லேடா, மச்சி ஓபன் தி பாட்டில், நண்பனே, பல்லே லக்கா என எல்லாமே சூப்பர்ஹிட்ஸ் தான்.

Next Story