என்னது 20 பாடலா? ‘பறந்து போ’ படத்தின் சீக்ரெட்டை அம்பலப்படுத்திய மாரி செல்வராஜ்

By :  ROHINI
Published On 2025-07-02 17:00 IST   |   Updated On 2025-07-02 17:00:00 IST
paranthupo

இயக்குனர் ராமின் உதவியாளர்தான் மாரிசெல்வராஜ். அதனால் தன் குருவின் பறந்து போ படத்தை நாம் புரோமோட் செய்யாமல் வேறு யார் செய்வார் என்பதற்காக அந்தப் படத்தை ஏற்கெனவே பார்த்துவிட்டு மாரிசெல்வராஜ் அவருடைய அனுபவங்களை கூறியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் அந்தப் படத்தை பார்த்தவர்கள் சிலர் மாரிசெல்வராஜிடம் அவரவர் அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார்களாம். அதையும் கூறியிருக்கிறார். இதோ அவர் கூறியது:

பறந்து போ படத்தை பார்த்தவர்கள் அனைவரும் சொன்னது என்னவெனில் இயக்குனர் ராமை பற்றி ஏற்கனவே தீர்மானித்து படம் பார்க்க சில பேர் போய் இருப்பார்கள். ஏனெனில் கற்றது தமிழ் ,தரமணி, பேரன்பு போன்ற ராம் இயக்கிய திரைப்படங்கள் வலியுடன் எமோஷனலை வெளிப்படுத்திய படங்களாக இருந்திருக்கும் .பறந்து போ படத்தை பார்க்கும் போது பெரிய சர்ப்ரைஸ் ஆக இருந்தது என படம் பார்த்தவர்கள் சொன்னார்கள்.

ராமிடமிருந்து இவ்வளவு ஈஸியான ஒரு எதார்த்தமான வாழ்க்கையை வெளிப்படுத்தும் படத்தை இயக்குவார் என யாருமே எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் இயக்குனர் ராமை பொருத்தவரைக்கும் அவரிடம் பேச வேண்டும் என்றால் நிறைய நாம் தெரிந்து இருக்க வேண்டும். படங்களை பற்றி பேச வேண்டும் என்றால் ஏற்கனவே நாம் நிறைய படங்களை பற்றி தெரிந்திருக்க வேண்டும். அப்படி எல்லா விஷயங்களும் அறிந்தவர் தான் .இப்படி சொன்னவர்கள் அனைவருமே வாழ்க்கையை மிகவும் எளிமையாக கொண்டாட்டமாக உறவுகளை அன்பை இவ்வளவு எளிமையாக ராம் படத்தில் சொன்னார் என்பதை பார்க்கவே எங்களுக்கு சர்ப்ரைஸ் ஆக இருந்தது என்று படம் பார்த்தவர்கள் கூறினார்கள் .

அந்த அளவுக்கு படம் பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ரொம்ப நாள் கழித்து மனசு நிறைவாக இருக்கிறது .ராம் சந்தோஷமாக எடுத்த படமா என்று அனைவருமே என்னிடம் கேட்டார்கள். இந்த படத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் அப்படியே அலைய விட்டிருக்கிறார் .அதுவும் சந்தோஷமாக அலைய விட்டிருக்கிறார். இதற்கு முந்தைய படங்களை பார்க்கும் பொழுது பறந்து போ படத்தில் 20 பாடல்கள் இருக்கிறது.

பாடலை ஒவ்வொரு சூழ்நிலையிலும் பயன்படுத்தியிருக்கிறார். அன்றாட வாழ்க்கையில் நாம் மாடிப்படி ஏறி இறங்கும் போது ஏதாவது ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே போய் இருப்போம். குளிக்கும்போது ஏதாவது ஒரு பாடலை பாடிக்கொண்டே குளிப்போம், தூங்கும் போதும் ஒரு பாடலை பாடிவிட்டு அதன் பிறகு தூங்குவோம். இப்படி நமது அன்றாட வாழ்க்கையில் நாம் எந்தெந்த சூழ்நிலையில் பாடலை பாடுகிறோமோ அதை அப்படியே இந்த படத்திலும் காட்டி இருக்கிறார் ராம் என மாரி செல்வராஜ் அந்த பேட்டியில் கூறுகிறார்.

Tags:    

Similar News