மதகஜராஜா வெற்றிக்கு யோகிபாபு காரணமா? காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதைதான்..!

by Sankaran |   ( Updated:2025-01-18 07:00:13  )
mathakajaraja yogi babu
X

பொங்கல் தினத்தையொட்டி விஷால் நடித்து 12 ஆண்டுகளாகப் பொட்டியில் தூங்கிய மதகஜராஜா படம் வெளியானது. படத்தை சுந்தர்.சி.இயக்கி இருந்தார். சந்தானம் காமெடி சூப்பர். அஞ்சலி, வரலட்சுமி உள்பட பலர் நடித்துள்ளனர்.

பெரும் வரவேற்பு: இந்தப் படத்துக்கு இப்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு. என்ன காரணம்னா யோகிபாபுதான்னு சொல்லி ஆச்சரியப்படுத்துகிறார் இந்தப் பிரபலம். அவர்தான் நடிக்கவே இல்லையேன்னு கேட்குறீங்களா... வாங்க என்னன்னு பார்க்கலாம்.


திரையுலகைப் பொருத்தவரை மதகஜராஜாதான் வின்னர். 15 கோடி பட்ஜெட்ல எடுக்கப்பட்ட படம். 3 நாள்ல 13 கோடி வசூல் பண்ணி இருக்குன்னா அதுதானே வின்னர். அதே நேரம் தரத்தின் அடிப்படையில் பார்க்கும்போது மதகஜராஜாவை கொண்டாட முடியாது. அதுக்கு அப்படி ஒரு இடத்தையும் கொடுக்க முடியாது.

வணங்கான்: அந்த வகையில பெட்டரான படமா வணங்கான சொல்லலாம். 12 வருஷம் கழிச்சி மதகஜராஜா ரிலீஸ் ஆகி இருக்கு. இருந்தாலும் மக்கள் ரொம்பவே கொண்டாடுறாங்க. சந்தானத்தோட காமெடிக்கு நல்ல வரவேற்பு இருக்குன்னு ஆங்கர் பேசவும் பிஸ்மி இப்படி சொல்கிறார்.

யோகிபாபு: ரொம்பவும் உண்மையைச் சொல்லணும்னா மதகஜராஜா இவ்ளோ பெரிய வெற்றி அடைஞ்சதுக்குக் காரணமே யோகிபாபுதான். இது கொஞ்சம் ஆச்சரியமா இருக்கும். பிளாஷ்பேக் சொல்றேன். சந்தானம் காமெடியா இருக்கும்போது நிறைய படங்கள் ரிலீஸ் ஆகும். அதுல அவர் இருப்பாரு. படங்கள் எல்லாம் கலகலப்பா இருக்கும்.

சந்தானம்: அது கமர்ஷியலாகவும் ஓடியது. சந்தானத்துக்கும் நல்ல பேரு கிடைச்சது. நாம ஹீரோவா நடிக்கலாம்னு எண்ணம் வர்ற அளவுக்கு சந்தானத்துக்கே நம்பிக்கையைக் கொடுத்தது. அந்தக் காலகட்டத்துல தயாரான படம்தான் மதகஜராஜா. ஆனா அந்த காலகட்டத்துல இது ரிலீஸ் ஆகி இருந்தா இவ்ளோ வரவேற்பு கிடைச்சிருக்காது.

மொக்கை காமெடி: அப்போ எல்லாப் படங்கள்லயும் இந்தக் காமெடி இருந்தது. வந்தா பத்தோடு 11 ஆகி இருக்கும். அப்புறம் சூரி, சந்தானம் கதாநாயகன் ஆகிட்டாங்க. யோகிபாபு தான் காமெடி. இங்கு காமெடிக்குப் பஞ்சமாயிடுச்சு. அதனால மக்களுக்கு இந்தப் படம் என்ஜாய் ஆகிடுச்சு.

அதனால யோகிபாபு போன்றவர்கள் நல்ல காமெடியைக் கொடுத்திருந்தால் இது எடுபட்டு இருக்காது. அவர் மொக்கை காமெடியைத் தந்ததால் இது பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story