‘எம்.குமரன்’ படத்தில் இன்னும் எனக்கு விடை தெரியாத கேள்வி.. நெகிழ வைத்த மோகன் ராஜா

ரவி மோகன் மற்றும் மோகன் ராஜா கூட்டணியில் இரண்டாவதாக உருவான படம் தான் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. அம்மாவுக்கு மகனுக்கும் இருக்கும் பாசம் தான் இந்தப் படம். இதில் ரவி மோகனுக்கு அம்மாவாக நதியா நடித்திருப்பார். அப்பாவாக பிரகாஷ் ராஜ் நடித்திருப்பார். முதல் படமான ஜெயம் படத்தின் பெரிய வெற்றி இந்த படத்திற்கு மிகவும் உதவிக்கரமாக இருந்தது.
குறிப்பாக ஜெயம் படத்திற்கு பிறகு மோகன் ராஜாவும் ரவி மோகனும் தனித்தனியாகத்தான் படம் பண்ண வேண்டும் என நினைத்தார்களாம். ஆனால் மோகன் ராஜாவுக்கு எந்தவொரு படமும் வராததால் மீண்டும் ரவி மோகனை வைத்தே படத்தை எடுக்கலாம் என தெலுங்கு படத்தை ரீமேக் செய்து எம். குமரன் படத்தை எடுத்திருக்கிறார். அதுவும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த ஒரிஜினல் வெர்ஷனில் மாற்றம் செய்து இந்தப் படத்தை எடுத்தாராம்.
ரவி மோகனுக்கு ஜோடியாக அசின் இந்தப் படத்தின் மூலம் தான் அறிமுகமானார். முதல் படத்திலேயே இளசுகளை வெகுவாக கவர்ந்தார் அசின், இந்த நிலையில் எம்.குமரன் படத்தை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். அதனால் படத்தை பற்றி மோகன் ராஜா பல விஷயங்களை பகிர்ந்து வருகிறார். இந்தப் படத்தில் இரண்டு கேள்விகள் மோகன் ராஜா மனதில் இருக்கிறதாம். ஆனால் அதற்கு யாருமே விடை சொல்ல முடியாதாம்.
அது என்னவெனில் எந்தவொரு தாயும் மகனை விட்டு சாகவேண்டும் என நினைக்க மாட்டார். ஏனெனில் தனக்கு பின் தன் மகன் அநாதையாக போய்விடுவான் என நினைத்து இன்னொருத்தி கையில் புடித்துக் கொடுத்துவிட்டுத்தான் போக வேண்டும் என நினைப்பாள். அப்படித்தான் இந்தப் படத்திலும் தன் மகனை இன்னொருத்தி கையில் புடித்துக் கொடுக்கத்தான் மலேசியாவிற்கு நதியா அனுப்பினாரா?
அல்லது என் புள்ளையை எப்படி வளர்த்திருக்கிறேன் பாருடா என்று தன் புருஷனிடம் காட்ட மலேசியா அனுப்பினாரா? என இப்படி இரண்டு கேள்விகள் இருக்கின்றது. இரண்டிற்குமான பதில் தான் இந்தப் படம். கடைசியில் நீ மட்டும் வரவில்லை என்றால் என்னாகியிருப்பேன் என்று அப்பா வருத்தப்படுவதில் இருந்தே ஒரு ஆண் எப்படி இருக்க வேண்டும் என்பதை தன் மகனிடம் இருந்து கற்றுக் கொள்ளும் அப்பாவா இந்த கதை அமைந்திருக்கும்.