2024-ல் யூட்யூபில் பட்டையை கிளப்பிய பாடல்கள்!.. படம் ஓடலேனாலும் பாட்டாவது ஓடிருக்கே!..
2024 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் வெளிவந்த பல பாடல்கள் ஹிட் கொடுத்துள்ளது. அப்படி யூடியூபில் அதிக வியூசுக்களை அள்ளிய பாடல்கள் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
அச்சச்சோ - அரண்மனை 4:
இயக்குனர் சுந்தர் சி தானே இயக்கி நடித்து தயாரித்த திரைப்படம் அரண்மனை ௪. இப்படம் கடந்த மே மாதம் வெளியானது. இப்படத்தில் ராசி கண்ணா, தமன்னா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்த நிலையில் படம் வெளியாகி சூப்பர் சூப்பர் ஹிட் கொடுத்தது. இப்படத்தில் இடம்பெற்று இருந்த அச்சச்சோ என்ற பாடல் யூடியூபில் 28.3 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
மனசுலாயோ-வேட்டையன் :
ஜெய் பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் ஏ எல் ஞானவேல் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 10ம் தேதி வெளியான திரைப்படம் வேட்டையன். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் இப்படத்தில் இடம்பெற்று இருந்த பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதிலும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றிருந்த மனசுலாயோ பாடல் யூடியூபில்13. 3 கோடி பார்வையாளர்களை பெற்றிருக்கின்றது.
வாட்டர் பாக்கெட் - ராயன் :
நடிகர் தனுஷ் தானே இயக்கி நடித்த திரைப்படம் ராயன். தனது 50வது படமாக எடுக்கப்பட்ட இந்த திரைப்படத்தில் அனைத்து பாடல்களுமே மிகச்சிறப்பாக இருந்தது. அதிலும் வாட்டர் பாக்கெட் பாடல் ரசிகர்களை பெருமளவு கவர்ந்தது. இந்த பாடல் யூடியூபில் 15.1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
மினுக்கி மினுக்கி - தங்கலான்:
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தங்கலான். ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இருப்பினும் இப்படத்தில் இடம்பெற்று இருந்த மினுக்கி மினுக்கி என்ற பாடல் பிரபலமாக இருந்தது. இந்த பாடல் யூடியூபில் 9.1 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
கோல்டன் ஸ்பேரோ - நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் :
தனுஷ் அடுத்ததாக தான் இயக்கி இருக்கும் திரைப்படம் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம். இந்த திரைப்படம் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இப்படம் இந்த வருடம் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டிருக்கின்றது. இப்படத்தில் இருந்து வெளியான முதல் சிங்கிள் கோல்டன் ஸ்பேரோ என்ற பாடல் யூடியூபில் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. இப்பாடல் பத்து கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.
மட்ட பாடல் - கோட்:
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியான திரைப்படம் கோட். இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றிருந்தாலும் நடிகர் விஜய் மற்றும் திரிஷா இணைந்து நடனமாடிய மட்ட பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த பாடல் யூடியூபில் 7.3 கோடி பார்வையாளர்களை கடந்துள்ளது.