குபேராவுக்கு வச்ச அதே ஆப்பு கூலிக்கும் வச்சிட்டாரே!.. நாகார்ஜுனாவை கண்ட்ரோல் பண்ணுங்கப்பா!..

Coolie: தெலுங்கு சினிமாவில் 35 வருடங்களுக்கும் மேல் நடித்து சீனியர் நடிகராக வலம் வருபவர் நாகார்ஜுனா. மணிரத்னம் இயக்கத்தில் நடித்த கீதாஞ்சலி என்கிற தெலுங்கு படம் மூலம் அறிமுகமானார். இப்படம் தமிழில் இதயத்தை திருடாதே என வெளியானது. அடுத்து ராம்கோபால் இயக்கத்தில் இவர் நடித்த தெலுங்கு படமான சிவா தமிழில் உதயம் என்கிற பெயரில் டப் செய்யப்பட்டு தமிழகத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது.
அதன்பின் அவரின் நடிப்பில் உருவான தெலுங்கு படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியானது. அதுமட்டுமில்லாமல் ரட்சகன் போன்ற நேரடி தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார். தனுஷுடன் இணைந்து குபேரா படத்திலும் நடித்திருந்தார். இந்த படம் தெலுங்கில் உருவாக்கப்பட்டு தமிழ், இந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்திலும் நாகார்ஜுனா வில்லனாக நடித்திருக்கிறார். சமீபத்தில் நடந்த இசை வெளியீட்டு விழாவிலும் அவர் கலந்துகொண்டு பேசினார். இந்நிலையில் கூலி தெலுங்கு ரிலீஸ் புரமோஷன் நேற்று ஆந்திராவில் நடந்தது. இதில் பேசிய நாகார்ஜுனா ‘கூலி படத்தில் என்னுடைய வேடம் பற்றி லோகேஷ் சொன்னபோது ‘ரஜினி சார் இதை ஒற்றுக்கொள்வாரா என்றுதான் கேட்டேன். ஏனெனில் என் கேரக்டர் ஹீரோ ரோலுக்கு இணையாக இருந்தது’ என பேசியிருக்கிறார்.
ஏற்கனவே குபேரா பட புரமோஷன் ஆந்திராவில் நடந்தபோது ‘இந்த படத்தில் நான்தான் ஹீரோ’ என நாகார்ஜூனா பேசினார். அதனால்தான் குபேரா படம் தமிழில் ஓடவில்லை என பரவலாக சொல்லப்பட்டது. தற்போது கூலி படத்திலும் நான்தான் ஹீரோ என பேசியிருப்பது ட்ரோலில் சிக்கியிருக்கிறது.