என்ன படம் எடுக்கணும்னு சொல்ற உரிமை உங்களுக்கு கிடையாது... கெத்து காட்டும் இயக்குனர்

சமீபத்தில் திரைக்கு வந்த நந்தன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இரா.சரவணன் எழுதி இயக்கியுள்ளார். சசிகுமார், சுருதி பெரியசாமி, பாலாஜி சக்திவேல், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.

தலித் சமூகத்தினர் பதவிகளை வகிக்கம்போது சந்திக்கும் பிரச்சனைகள், ஆதிக்க சாதியினரின் கைப்பொம்மைகளாகிறார்களா என்பதே கதை. இந்தப் படத்திற்கு பல்வேறு தரப்பு ரசிகர்களும் வரவேற்பு கொடுத்திருந்தனர். இனி வரும் காலத்தில் நந்தன்கள் வெற்றி பெறுவார்கள் என்று திருமாவளவனே படத்தைப் பாராட்டி இருந்தார்.



எச்.வினோத்தும் கூட இந்தப் படத்தைப் பற்றி வெகுவாகப் பாராட்டி இருந்தார். அவர் சொன்னது இதுதான். என்னைப் பொருத்தவரை எது நல்ல படம் என்றால் பெரிய பட்ஜெட் கொண்ட படமோ, பெரிய நடிகர்கள் நடிக்கும் படமோ அல்லது பாக்ஸ் ஆபீஸில் அதிக வசூல் செய்யும் படமோ அல்ல.

ஒரு சராசரி மனிதனை இன்னும் மேம்பட்ட மனிதனாக மாற்றும் அல்லது மாற்ற முயற்சிக்கும் படங்களே சிறந்த படம். நந்தன் சிறந்த படம். அனைவரும் திரையரங்குகளில் வந்து இப்படத்தைப் பார்த்து ஆதரவு கொடுங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்தப் படம் குறித்து சமீபத்தில் இயக்குனர் சொன்ன கருத்து ஒன்று தற்போது வைரலாகி உள்ளது.

என்னுடைய படம் சரியில்லை என்று சொல்வதற்கு உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. என்ன சார் படம் எடுத்திருக்கீங்க. என்னுடைய ரெண்டு மணி நேரமும், 150 ரூபாயும் செலவு பண்ணியிருக்கேன். ஆனா இவ்வளவ கேவலமா படம் எடுத்திருக்கீங்க என்று நீங்கள் எந்தவிதமான விமர்சனமும் என் மீது வைக்கலாம்.

சொல்லப் போனால் என்னுடைய சட்டையைப் பிடிப்பதற்கான உரிமை கூட உங்களுக்கு இருக்கிறது. ஆனால் நான் என்ன படம் எடுக்கணும்னு சொல்ற உரிமை உங்களுக்கு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

விவசாயக்குடும்பத்தைச் சேர்ந்தவர் இயக்குனர். கத்துக்குட்டி படத்தின் இயக்குனர். பத்திரிகையாளராக இருந்த இவர் படம் எடுத்ததால் பெரிய அளவில் எதிர்பார்ப்புக்குள்ளானது.

Related Articles
Next Story
Share it