தேசிய விருது லிஸ்டில் 2 தமிழ் சினிமா இயக்குனர்கள்!.. செம அப்டேட்!..

by Murugan |
parking
X

ஒவ்வொரு வருடமும் மத்திய அரசு சார்பில் திரைப்பட துறையினருக்கு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்திய சினிமாவை பொறுத்தவரை தேசிய விருது பெருமை வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. அதேநேரம் இந்திய சினிமாவில் எல்லா சிறந்த கலைஞர்களுக்கும் தேசிய விருது கிடைத்ததா என்றால் இல்லை.

நடிகர் திலகம் என அழைக்கப்பட்ட சிவாஜி கணேசனுக்கே இந்த விருது கொடுக்கப்படவில்லை. சிவாஜி மட்டுமல்ல நாகேஷ், ரங்காராவ், மனோரமா போன்ற சிறந்த கலைஞர்களுக்கும் கூட தேசிய விருது கிடைக்கவில்லை. பொதுவாக தேசிய விருது என்றாலே ஹிந்தி, மாராத்தி மொழி படங்களுக்கே அதிகம் கொடுக்கிறார்கள் என்கிற விமர்சனம் பல வருடங்களாக இருக்கிறது.

2022 வருடத்திற்கான தேசிய விருதுகள் போன வருடம் கொடுக்கப்பட்டது. தமிழ் சினிமாவை பொறுத்தவரையில் திருச்சிற்றம்பலம் படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருது நித்யாமேனனுக்கு கிடைத்தது. அதேபோல் பொன்னியின் செல்வன் படத்திற்கு இசை, ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு என 3 விருதுகள் கிடைத்தது. சிறந்த இயக்குனருக்கான விருது உஞ்சாய் என்கிற படத்திற்காக சூரஜ் ஆர் பர்ஜாத்யாவுக்கு கொடுக்கப்பட்டது.


இந்நிலையில் 2023ம் ஆண்டுக்கான 71வது தேசிய விருது வழங்கும் விழா விரைவில் நடைபெறவிருக்கிறது. இந்த முறை சிறந்த இயக்குனருக்கான விருது பட்டியலில் போர் தொழில் படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா, பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோரின் பெயர்கள் அடிபடுகிறது.


Next Story