சிக்குனது யாரு?.. நயன்தாராவா?.. ஹரியா?!.. ரணகளமாக போகும் விஜய்சேதுபதி படம்!..

by Ramya |
nayanthara
X

nayanthara 

நடிகர் விஜய் சேதுபதி: தமிழ் சினிமாவில் ஹீரோ, வில்லன், குணச்சித்திர நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் விஜய் சேதுபதி. இந்த கதாபாத்திரத்தில் தான் நடிப்பேன் என்றெல்லாம் இல்லாமல் தனக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்து ஸ்கோர் செய்யக்கூடிய ஒரு நடிகர்.

கடந்த சில வருடங்களாக வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி வந்த விஜய் சேதுபதி இனிமேல் வில்லன் ரோலில் நடிக்க மாட்டேன் என்று முடிவு எடுத்திருக்கின்றார். அதனை தொடர்ந்து மகாராஜா என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக கம்பேக் கொடுத்திருந்தார். இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்த நிலையில் தற்போது வெளிநாடுகளிலும் சக்க போடு போட்டு வருகின்றது.


இவர் கடைசியாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை 2 திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் ஒரு போராளியாக வாத்தியார் கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து அனைவரையும் அசர வைத்திருக்கின்றார். இந்த திரைப்படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியான நிலையில் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டு வருகின்றது.

ஹரி கூட்டணியில் விஜய் சேதுபதி:

விடுதலை 2 திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி ஹரி இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. இயக்குனர் ஹரி தமிழ் சினிமாவில் சாமி, ஆறு, சிங்கம், தாமிரபரணி என பல ஹிட் திரைப்படங்களை கொடுத்தவர். இவர் கடைசியாக விஷால், ப்ரியா பவானி சங்கர் ஆகியோரை வைத்து ரத்னம் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்திருந்தது. அதனை தொடர்ந்து புதிய படங்கள் எதுவும் இயக்காமல் இருந்து வந்த ஹரி தற்போது விஜய் சேதுபதியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது இயக்குனர் ஹரி விஜய் சேதுபதியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும் இதற்காக விஜய் சேதுபதி இடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.

மேலும் இந்த திரைப்படத்தை நடிகை நயன்தாரா தயாரிக்க இருக்கின்றார். நடிகை நயன்தாரா தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக இப்படத்தை தயாரிக்க இருப்பதாக சமூக வலைதள பக்கங்களில் தகவல் வெளியாகி வருகின்றது.

சிக்குனது நயன்தாராவா? ஹரியா?

ஹரியைப் பொறுத்தவரையில் தனது படத்தில் நடிக்கக்கூடிய நடிகர்கள் அனைவருமே மிகவும் சரியாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கக்கூடிய ஒரு இயக்குனர். தான் கிழித்த கோட்டை கூட தாண்டக்கூடாது என்று எண்ணுபவர். அப்படி இருக்கையில் தயாரிப்பாளரும் தான் சொல்பேச்சை கேட்கக்கூடிய ஒரு நபராக இருக்க வேண்டும் என்று தானே எண்ணுவார்.

ஆனால் நயன்தாரா அப்படிப்பட்டவர் கிடையாது. அவர் என்ன நினைக்கிறாரோ அதனை தான் செய்ய வேண்டும் என்று எண்ணுபவர். இப்படி இருக்கையில் இருவருக்கும் எப்படி செட்டாகும். அப்படி ஒரு வேலை இந்த திரைப்படத்தை நயன்தாரா தயாரித்தால் என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் வரப்போகிறது என்பது தெரியவில்லை.


ஆனால் இதில் முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் ஐயா திரைப்படத்தின் மூலமாக நடிகை நயன்தாராவை சினிமாவிற்கு அறிமுகம் செய்ததே இயக்குனர் ஹரிதான். இதனால் தனது முதல் பட இயக்குனர் என்பதற்காக நயன்தாரா ஹரி சொல்வதை கேட்பாரா? அல்லது ஹரி நயன்தாரா சொல்வதைக் கேட்கப் போகிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Next Story