மாதவனின் உல்லாசப்படகில் நயன்தாரா... புத்தாண்டு நள்ளிரவில் ஒரே கொண்டாட்டம்தான்!

by Sankaran |   ( Updated:2025-01-04 04:25:42  )
nayanthara, madhavan
X

நடிகை நயன்தாரா சமீபகாலமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கடந்த ஆண்டில் தனுஷ் உடன் பிரச்சனை, திருமண ஆவணப்படத்திற்காக இருவருக்கும் அப்படி ஒரு பிரச்சனை, அவருக்கு அருகிலேயே கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து இருந்தது என அவரது ஒவ்வொரு அசைவும் சமூகவலைதளங்களுக்கு கன்டென்ட்டுக்கு நல்ல தீனியாக அமைந்தது.

ஆனால் அதை எல்லாம் அவர் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் தனது வேலையை செவ்வனே செய்து வருகிறார். அதுதான் விக்னேஷ் சிவனுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தை ஒட்டி எடுத்த பல போட்டோக்களை சமூக வலைதளத்திலும் பகிர்ந்து இருந்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தப் புத்தாண்டை அவர் எப்படி கொண்டாடினார்? யாருடன் கொண்டாடினார்னு பிரபல யூடியூபர் பயில்வான் ரங்கநாதன் இப்படி சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.

கேரளாவில் மாதவனுக்குச் சொந்தமான உல்லாசப்படகில் நயன்தாரா புத்தாண்டைக் கொண்டாடினார். நயன்தாரா இப்போதெல்லாம் பாரீஸ், சுவிட்சர்லாந்து என்று தன்னுடைய வளர்ப்பு மகன்களை அழைத்துக் கொண்டு கூடவே தனது கணவர் விக்னேஷ் சிவனையும் அழைத்துக் கொண்டு ஜாலியாகப் போய் இருக்கிறார்.

சமீபத்தில் அவர் புத்தாண்டை கேரளாவில் உள்ள உல்லாசப் படகில் விக்னேஷ் சிவன், மாதவன், அவரது மனைவியுடன் உல்லாசமாகச் சென்று இருக்கிறார். மாதவன் தற்போது புதிய படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிக்கொண்டு இருக்கிறார்.

இவர்கள் செல்லும் இந்த படகானது மாதவனுக்கு சொந்தமானது. இது 12 கோடி மதிப்பிலானது. எப்போதெல்லாம் படப்பிடிப்பு இல்லாமல் இருக்கிறாரோ அப்போது அந்தப் படகில் சென்று தன்னோட படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொண்டு இருப்பாராம் மாதவன்.

mathavan

.புத்தாண்டை அந்தப் படகிலே கொண்டாட நயன்தாரா விரும்பினாராம். அதற்கு மாதவனும் ஓகே சொன்னாராம். ஏன்னா இப்போது மாதவனுடன் ஒரு புதிய படத்தில் ஜோடியாக நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகி உள்ளாராம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story