அந்த போட்டோ என்ன சொல்லுது? சிம்பு - வெற்றிமாறன் படத்தில் கேமியோ ரோலில் கலக்கும் பிரபலம்

By :  ROHINI
Published On 2025-06-17 12:09 IST   |   Updated On 2025-06-17 12:09:00 IST

vetrimaran

டிரெண்டிங்கான புகைப்படம்:

ஒரே ஒரு புகைப்படம் நேற்று வெளியாகி சோசியல் மீடியாக்களில் பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் உருவாக போகிறது என்றும் அந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கி விட்டது என்றும் அது சம்பந்தமான புகைப்படம் தான் இது என்றும் பெரிய அளவில் அந்த போட்டோ மக்களிடையே பிரபலமானது.

simbu

அடுத்தடுத்து படங்கள்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிம்பு. இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தக் லைஃப் .படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் படத்தில் சிம்புவின் நடிப்பு நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து சிம்பு, ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 49 வது படத்திலும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் 50ஆவது படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 51 வது படத்திலும் என அடுத்தடுத்து படங்களில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார்.

சிம்புவின் ஐடியா:

இதற்கிடையில் டான் பிக்சர்ஸ் நிறுவனம் ஐடி ரெய்டில் சிக்கிக்கொள்ள சிம்புவின் 49 வது திரைப்படத்தை அப்படியே ட்ராப் செய்து வைத்திருந்தார்கள். சிம்புவும் இப்போதைக்கு இந்த படத்தை எடுக்க வேண்டாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னதாகவும் தெரிகிறது. அதனால் இந்த ஒரு இடைவெளியில் வேறு ஏதாவது ஒரு பெரிய படத்தை பண்ணி விடலாமா என்ற ஒரு ஐடியாவில் இருந்தார் சிம்பு.

வெற்றிமாறனுடன் கூட்டணி:

இன்னொரு பக்கம் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தை எடுப்பதாக இருந்தார். அதற்குள் சூர்யா அவருடைய 46வது படமான வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க போய்விட்டார். அந்த படம் முடிய ஆறு மாதம் ஆகும். அந்த இடைவெளி கேப்பில் வெற்றிமாறன் வேறொரு படத்தை எடுத்து விடலாம் என நினைத்திருந்தார். அதனால் சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் உருவாக போகிறது என செய்திகள் வெளியாகின.

அது ஓரளவு உண்மை என்றும் சொல்லப்பட்டது. இவர்கள் இணையும் திரைப்படம் ஒரு பெரிய படமாக இருக்கும். ஆனால் அது வடசென்னை 2வாக இருக்காது. சென்னையில் நடந்த ஒரு கதையை மையப்படுத்தி தான் அந்த படம் உருவாகும் என தெரிகிறது .இந்த நிலையில் தான் சிம்பு வெற்றிமாறன் படத்தின் படப்பிடிப்பது நேற்று ஆரம்பமாகி இருக்கிறது என்பதை உணர்த்தும் விதமாக அந்த ஒரு புகைப்படம் வெளியானது.

nelson

இந்தப் படத்தில் கேமியோ ரோலில் இயக்குனர் நெல்சன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் வருகிறார் என்றும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. அந்த புகைப்படத்தில் நெல்சனும் சிம்புவின் அருகில் நின்று கொண்டிருந்தார். அதனால் இந்த படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.

Tags:    

Similar News