200 கோடியில் மகன் திருமணம்! அம்பானிக்கு அடுத்து நெப்போலியன் தான் போல

தமிழ் சினிமாவில் ஒரு கிராமத்து நாயகனாக அறிமுகமானவர்தான் நடிகர் நெப்போலியன். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து படத்தின் மூலம் அறிமுகமானார் நெப்போலியன். அந்தப் படத்தில் 60 வயது மதிக்கத்தக்க கேரக்டரில் நடித்திருப்பார். ஆனால் அப்போது அவருக்கு வயது 21 தான். அறிமுகமான முதல் படத்திலேயே வயதான தோற்றம், வில்லத்தனம் ஆகியவற்றால் மக்களிடைய ஈர்க்கப்பட்டார்.

அதன் பிறகுதான் எஜமான் படத்திலும் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். எஜமான் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு தெலுங்கிலும் சில படங்களில் வில்லனாக நடிக்கக் கூடிய வாய்ப்பு நெப்போலியனுக்கு கிடைத்தது. அதனை தொடர்ந்து மலையாள படத்திலும் நடித்தார். கிழக்கு சீமையிலே படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக எண்டிரியானார் நெப்போலியன்.

அந்தப் படத்திற்கு பிறகு சீவலப்பேரி பாண்டி படம் நெப்போலியனை சிறந்த நடிகனாக மக்கள் முன் நிறுத்தியது. இந்தப் படம் பெரிய அளவு வெற்றியை பெற்றது. இப்படி படிப்படியாக பல படங்களில் நடித்து வந்த நெப்போலியன் அரசியலிலும் கால்பதித்தார். 2001 ஆம் ஆண்டு மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வில்லிவாக்கம் தொகுதியில் வென்று சட்டமன்ற உறுப்பினாரானார்.

பின்னர் சினிமாவும் வேண்டாம். அரசியலும் வேண்டாம் என ஐடி தொழில் முனைவோர் துறையில் இணைந்தார். சென்னையில் ஜீவன் ஐடி டெக்னாலஜி என்ற பெயரில் கம்பெனியை துவங்கிய நெப்போலியன் தன் மகனுக்காக அமெரிக்காவில் தன் குடும்பத்துடன் செட்டிலாகிவிட்டார். இப்போது தன் மூத்த மகன் தனுஷ் திருமணத்தை ஜப்பானில் நடத்த திட்டமிட்டுள்ளார் நெப்போலியன்.

அதற்காக அமெரிக்காவில் இருந்து கனடா வரை சாலை வழிப் பயணம் மேற்கொண்ட நெப்போலியன் அங்கு இருந்து பெரிய சொகுசு கப்பலில் ஜப்பான் சென்று கொண்டிருக்கிறார். கனடாவில் இருந்து ஜப்பானுக்கு செல்ல 37 மணி நேரம் ஆகுமாம். அதுவரை போரடிக்காமல் இருக்க கப்பலிலேயே பல விளையாட்டு பொழுதுபோக்கு அம்சங்கள் இருக்கிறதாம்.

மகன் திருமணத்திற்காக கிட்டத்தட்ட 200 கோடி வரை செலவு செய்யப் போவதாகவும் நெப்போலியன் கூறியிருக்கிறாராம். சினிமாவில் இருந்து அரசியல் வரை அனைவருக்கும் திருமணபத்திரிக்கைகள் வைத்திருக்கிறார். ஒரு வேளை வரவேற்பை சென்னையில் வைக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் மணப்பெண் அக்‌ஷயா திருநெல்வேலியை சேர்ந்தவர்.

rohini
rohini  
Related Articles
Next Story
Share it