அந்த தகுதி விஜய்சேதுபதிக்கு கிடையாது.. யோகிபாபுவால் வம்புல சிக்குன மக்கள் செல்வன்

vijaysethupathi
விஜய் சேதுபதி சமீபத்தில் யோகி பாபுவை பற்றி ஒரு பட விழாவில் பேசு இருந்தார். யோகி பாபு மாதிரி ஒரு நல்ல மனிதரை பார்க்க முடியாது என்றெல்லாம் கூறி இருந்தார். இதைப் பற்றி வலை பேச்சு பிஸ்மி கூறுகையில் இப்படி சொல்வதற்கு விஜய் சேதுபதிக்கு எந்த ஒரு தகுதியும் கிடையாது. ஏனெனில் யோகி பாபுவால் பாதிக்கப்பட்டவர்கள் பட தயாரிப்பாளர்கள். அவர்கள் தான் குற்றம் சாட்டுகிறார்கள்.
பலருக்கு பல முகங்கள் உண்டு. அதே மாதிரி தான் யோகி பாபு விஜய் சேதுபதி கிட்ட காட்டிய முகம் வேறு. ரொம்ப நல்லவன் என்கிற அந்த முகமூடி .ஆனால் தயாரிப்பாளர்கள் கிட்ட அவர் எப்படி காட்டினார் என்பதுதான் முக்கியமான கேள்வி. அதை வைத்து தான் அவரைப்பற்றி இப்படி ஒரு விமர்சனம் வருகிறது. ஒரு பட விழாவில் ஒரு தயாரிப்பாளர் பகிரங்கமாக பேசுகிறார் .என்ன இந்த பட புரோமோஷனுக்கு யோகி பாபு வரலையா ?
ஏன் ஏழு லட்சம் கிரெடிட் ஆகலையா? அதனாலதான் வரலையா என பகிரங்கமாக கேட்டார். ஏனெனில் அவர்கள் யோகி பாபுவால் பாதிக்கப்பட்டவர்கள். அப்படி இருக்கும் பொழுது நீங்கள் எப்படி யோகி பாபுவுக்கு இப்படி ஒரு சர்டிபிகேட்டை கொடுக்க முடியும். இன்னொரு தயாரிப்பாளர் தான் இதை சொல்ல வேண்டும். இல்லைங்க நான் யோகி பாபுவை வைத்து படம் தயாரித்தேன் .அவரால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஒத்துழைப்பு கொடுத்தார்.
அப்படின்னா ஒரு வேளை அடடா எல்லாம் தயாரிப்பாளர்களும் இப்படி சொல்கிறார்கள். இவர் மட்டும் யோகி பாபுவை பற்றி இப்படி சொல்கிறாரே என நாம் விசாரிக்கலாம். ஆனால் விஜய் சேதுபதி தன்னுடன் நடித்த ஒரு சக நடிகரை பாராட்டுவது என்பது ஒரு சம்பிரதாயம். அது எப்படி புகழ்ந்திருக்க வேண்டும் என்றால் ஏஸ் படத்தில் அவர் பிரமாதமாக நடித்தார். நிச்சயமாக இந்த படத்தின் வெற்றிக்கு அவருடைய கேரக்டர் உதவி பண்ணும் .
இந்த மாதிரி அவர் புகழ்ந்திருக்கலாம். அது இல்லாமல் யோகி பாபு என்கிற ஒரு தனி மனிதனுக்கு இவர் நன்னெறி சான்றிதழ் கொடுப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. அதனால் என்னை பொறுத்த வரைக்கும் விஜய் சேதுபதிக்கு இது தேவையில்லாத வேலை என்றுதான் நான் நினைக்கிறேன். இதில் என்ன சிக்கல் இருக்கிறது என்றால் நீங்கள் உங்கள் சுயலாபத்திற்காக இவருக்கு இப்படி ஒரு சர்டிபிகேட்டை கொடுக்கிறீர்கள் .இதனால் என்ன பாதிப்பு என்றால் அவரால் பாதிக்கப்பட்ட அந்த குரல் கண்ணீர் பொய்யாகிவிட வாய்ப்பு இருக்கிறது என பிஸ்மி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.