ஷூட்டிங் இல்லாம வெட்டியா இருக்கும் எஸ்.கே!. அதுக்குதான் இந்த அலப்பறையா?!...
Sivakarthikeyan: விஜய் டிவியில் ஆங்கராக இருந்து மிகவும் குறுகிய காலகட்டத்தில் சினிமாவில் வேகமாக வளர்ந்தவர் எஸ்.கே (சிவகார்த்திகேயன்). சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை கண்டு அவரின் சக நடிகர்கள் மட்டுமில்லாமல், அவரின் சீனியர் நடிகர்களும் பொறாமைப்பட்டதாக சொல்லப்பட்டது. காமெடி நடிகராக இருந்த சந்தானம் கூட சிவகார்த்திகேயனின் வளர்ச்சியை பார்த்து பொறாமைப்பட்டுதான் ஹீரோவாக நடிக்க முடிவு செய்தார் எனவும் ஒரு செய்தி உண்டு.
கடந்த பல வருடங்களாகவே மிகவும் பிஸியான ஒரு நடிகராகவே சிவகார்த்திகேயன் வலம் வந்து கொண்டிருக்கிறார். அவரின் கையில் எப்போதும் தொடர்ந்து படங்கள் இருக்கும். அதுவும் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடித்த அமரன் படம் சூப்பர் ஹிட் அடித்தபின் பல தயாரிப்பாளர்கள் சிவகார்த்திகேயனை வைத்து படமெடுக்க ஆசைப்படுகிறார்கள்.
ஏனெனில், அமரன் படம் 300 கோடி வசூலை தாண்டி சென்றது. சிவகார்த்திகேயனுக்கு ஒரு பழக்கம் உண்டு. தேவைப்பட்டால் அவரே ஒரு இயக்குனரை தொடர்பு கொண்டு பேசுவார். தேவையில்லை எனில் ஏற்கனவே நடிக்கிறேன் என சொல்லியிருந்தாலும் ‘அப்புறம் பார்க்கலாம் புரோ’ என சொல்லி கழட்டிவிடுவார்.
வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருந்த சிவகார்த்திகேயன் கோட் பட ரிசல்ட்டுக்கு பின் வெங்கட்பிரபுவை கழட்டிவிட்டார். பல மாதங்களாக அலைந்தும் அவருக்கு பிடிகொடுக்கவில்லை. ஏ.ஆர்.முருகதாஸை அழைத்து ‘உங்கள் இயக்கத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன் சார்’ என்றார். அப்படி உருவான மதராஸி படம் 80 சதவீதம் எடுக்கப்பட்டு அப்படியே நிற்கிறது.
ஒருபக்கம், சுதாகொங்கராவின் படத்திலிருந்து சூர்யா விலகவே ‘நான் நடிக்கிறேன் மேடம்’ என வாண்டடாக போய் வண்டியில் ஏறினார். அப்படி உருவான பராசக்தி படம் பாதியிலேயே நிற்கிறது. இலங்கையில் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தநிலையில் அதன்பின் டேக் ஆப் ஆகவில்லை. கடந்த ஒரு மாத காலமாக சிவகார்த்திகேயன் வீட்டில் சும்மா இருப்பதாகவே சொல்லப்படுகிறது.
அதனால்தான் கம்யூனிஸ்டு தலைவர் நல்ல கண்ணுவை போய் பார்ப்பது, டூரிஸ்ட் ஃபேமிலி படம் பார்த்து அப்படக்குழுவை தனது அலுவலகத்திற்கு வரவழைத்து பாராட்டுவது போன்ற விஷயங்களை செய்து வருகிறார். சிவகார்த்திகேயன் போன்ற நடிகர் ஒரு மாதம் சும்மா இருப்பதெல்லாம் சினிமாவுக்கு நல்லதில்லை என்கிறார்கள் சினிமா செய்தியாளர்கள். பராசக்தி படத்தின் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை நடந்தது குறிப்பிடத்தக்கது.