விஜயிடம் மிஸ் பண்ணிய அந்த வாய்ப்பு… பிரபல ஹீரோவை இயக்க இருக்கும் ஆர்.ஜே.பாலாஜி!
RJBalaji: தன்னுடைய இயக்கத்தில் தொடர்ந்து நடித்து வரும் ஆர்.ஜே பாலாஜி தற்போது கோலிவுட்டின் பிரபல நடிகர் ஒருவரை இயக்க இருப்பதாக ஆச்சரிய தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
ஆர் ஜே வாக இருந்த பாலாஜி கோலிவுட்டில் சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். நானும் ரவுடிதான் திரைப்படத்தில் முக்கிய இடத்தில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாசை அள்ளினார். இதைத்தொடர்ந்து எல்கேஜி திரைப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். அப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதைத்தொடர்ந்து கேரக்டர் ரோல்களை விட ஹீரோவாக நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். அதன்படி அவர் இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக வீட்டில் விசேஷங்க திரைப்படத்தை இயக்கி இருந்தார். நடிகராக மட்டுமல்லாமல் இயக்குனராகவும் தனி அங்கீகாரத்தை பெற்றார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் திரைப்படம் சுமார் வெற்றியை மட்டுமே பெற்று இருந்தது. இதைத்தொடர்ந்து இவர் தற்போது சூர்யாவின் 45வது திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது.
இதன் மூலம் ஆர் ஜே பாலாஜி திரிஷாவை வைத்து இயக்க இருக்கும் மாசாணி அம்மன் திரைப்படம் தற்போது நடக்காது என நம்பப்படுகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தை முடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. வரும் அக்டோபர் மாதம் சூர்யா 44 வது திரைப்படத்தின் ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் அடுத்த திரைப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த வருட கடைசியில் படத்தின் சூட்டிங் தொடங்கலாம் என நம்பப்படுகிறது. விஜயின் தளபதி 69 திரைப்படத்திற்கு ஆர்.ஜே பாலாஜி கதை சொல்லி இருந்ததும் ஆனால் அது நடக்காமல் போனதும் குறிப்பிடத்தக்கதுது.