பார்த்திபனின் அடுத்த முயற்சி! இதுக்கு மட்டும் விருது கிடைக்கல? சினிமாவ விட்டே போயிடுவாரு

parthiban
சினிமாவில் எதையும் வித்தியாசமான நோக்குடன் பார்ப்பவர் நடிகர் பார்த்திபன். சமீப காலமாக அவர் தன்னுடைய படங்களின் மூலம் சில பல வித்தியாசமான முயற்சிகளை எடுத்து வருகிறார் .அதிலும் ஒத்த செருப்பு திரைப்படம் தான் அவரின் இந்த முயற்சியை வெளியுலகத்திற்கு காட்டியது. அந்த திரைப்படத்தை பொருத்தவரைக்கும் பார்த்திபன் தவிர வேறு யாரும் அதில் நடித்திருக்க மாட்டார்கள்.
அதற்கு அடுத்தபடியாக இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் படத்தை முழுவதுமாக எடுத்தார் பார்த்திபன். ஏ ஆர் ரகுமான் மியூசிக்கில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை .ஆனால் அவருடைய முயற்சிக்கு பல பாராட்டுக்கள் கிடைத்தன. இந்த நிலையில் ஆனந்த விகடன் சார்பாக அவருக்கு ஒரு சமயம் விருது வழங்கப்பட்டது. அப்போது விருதை அவர் திரும்ப கொடுத்து விட்டார். அதற்கு காரணத்தையும் அவர் அந்த மேடையில் கூறியிருந்தார்.
அதாவது ஒத்த செருப்பு திரைப்படத்திற்காக எந்த விருதும் கொடுக்கவில்லை. அந்த படத்திற்கு சரியான அங்கீகாரமும் கிடைக்கவில்லை .அதனால் இந்த விருது எனக்கு வேண்டாம் இனிமேல் ஆனந்த விகடனில் இருந்து எந்த விருதையும் நான் வாங்கப் போவதும் இல்லை என அத்தனை பெரிய பெரிய நடிகர்கள் முன்னிலையில் இப்படி ஒரு கருத்தை பகிரங்கமாக தெரிவித்தார் பார்த்திபன்.
இந்த நிலையில் தற்போது அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒரு ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கு கொண்டு வருகிறார். சிங்கிள் பசங்க என பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சிக்கு பார்த்திபனுடன் சேர்ந்து ஆல்ய மானசா ஸ்ருதிகா அர்ஜுன் ஆகியோர்களும் நடுவர்களாக இருந்து வருகின்றனர். அப்போது அவருடைய அடுத்த முயற்சியை பற்றி பார்த்திபன் விளக்கமாக கூறியிருக்கிறார்.
அதாவது ஒத்த செருப்பு மற்றும் இரவின் நிழல் இரண்டு படத்திலும் எடுத்த முயற்சியை ஒரே படத்தில் எடுக்கப் போகிறேன் .அதாவது ஒரே ஒரு நபர் மற்றும் ஒரே ஷாட் இவைகளை மையமாக வைத்து என்னுடைய அடுத்த படத்தை எடுக்கப் போகிறேன். இது விருதை நோக்கிய படமாக இருக்கும் என்றும் கூறியிருக்கிறார். அதோடு என்னுடைய படமாக இருந்தால் மட்டுமே தான் நான் இப்படி வித்தியாசமான முயற்சிகளை எடுப்பேன்.
இதுவே வேறு ஒரு தயாரிப்பாளருக்கு படம் பண்ணுகிறேன் என்றால் இப்படி இருக்காது. நான் இன்னொரு தயாரிப்பாளருக்கு ஆண்டாள் என்ற பெயரில் ஒரு படத்தை எடுக்கப் போகிறேன் .அது டூரிஸ்ட் ஃபேமிலி மாதிரியான படமாக இருக்கும் என கூறி இருக்கிறார் பார்த்திபன் .இவருடைய ஒவ்வொரு படங்களும் விருதை நோக்கிய படமாக தான் இருக்கிறது. ஆனால் விருது கிடைக்காத பட்சத்தில் கொஞ்சம் டென்ஷன் ஆகி விடுகிறார் பார்த்திபன் .அதனால் அடுத்த படத்தில் ஆவது விருது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.