தயாரிப்பாளருக்கு சர்பிரைஸ் கிப்ட் கொடுத்த பார்த்திபன்... அடுத்த படத்துக்கு என்ன பேருன்னு பாருங்க..!
2025 புத்தாண்டு தொடங்குவதற்கு முன் டிசம்பர் 31ம் தேதி பார்த்திபனை சந்திக்கற வாய்ப்பு கிடைச்சது. அடுத்து என்ன படம்னு கேட்டேன். ஆவுடையப்பனும் ஆடியன்ஸ்சும். இதுதான் படத்துப் பேரு. ஆடியன்ஸ்சோட அந்தக் கேரக்டர் பேசுற மாதிரி ஒரு படமா பண்ணப்போறேன்னாரு. அதுல என்ன ஒரு புதுமைன்னா ஒத்தசெருப்பு படம் பண்ணினாரு. அது ஒன் ஆக்ட் படம்.
அடுத்து ஒரு படம் பண்ணினாரு. அது சிங்கிள் ஷாட். இந்தப் படத்தைப் பொருத்த வரைக்கும் ஒன் ஆக்ட். சிங்கிள் ஷாட். ஒரே நடிகர் சிங்கிள் ஷாட். இதுக்குப் பின்னாடி எவ்வளவு உழைப்புன்னு நினைச்சிப் பார்த்தேன். 2 தெலுங்கு படமும், ஒரு மலையாளப்படமும் நடிக்கிறேன். அதுல சம்பாதிக்கிற பணத்தை வச்சித்தான் இந்தப் படம் எடுக்கிறேன்னாரு.
சினிமா மேல ஆர்வமும் தாகமும் இல்லாம இதே மாதிரி எல்லாம் பண்ண முடியாதுன்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன், தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் தனது கருத்தைக் கூறினார். அந்த வகையில் தனஞ்செயனும் பார்த்திபன் பற்றி தனது கருத்துகளைப் பகிர்ந்தார். பார்த்திபன் சார் அல்டிமேட். கரெக்டா 31ம் தேதி பார்த்திபன் சார்கிட்ட இருந்து ஜிகினா எல்லாம் போட்டு ஒரு தட்டு வந்தது.
ஆபீஸ்ல பார்த்திபன் சார்கிட்ட இருந்து ஒண்ணு வந்ததுன்னாங்க. நான் வீட்டுக்கு அனுப்பிருங்கன்னு சொன்னேன். வந்ததும் ஓபன் பண்ணி பார்த்தா ஜிலேபி சார். இவ்ளோ பெரிசு. பயங்கர டேஸ்ட். நான் உடனே அவருக்கு ஒரு மெசேஜ் போட்டேன். புத்தாண்டு அன்னைக்கு இனிப்போடு அதை ஆரம்பிக்க வச்சிருக்கீங்க. ரொம்ப நன்றின்னு சொன்னேன்.
அதுக்கு தட்டுக்குப் பின்னாடி பாருங்கன்னு பதில் போட்டார். பின்னாடி என்னடா இருக்குன்னு பார்த்தா 'இந்த வட்டம் வட்ட மாதிரி உங்க வாழ்க்கையும் பல வட்டங்களோடு சிறப்பாக அமைய வேண்டும்'னு கையெழுத்தும், தேதியும் இட்டு போட்டுருந்தாரு. எவ்வளவு இன்வால்மென்ட் இருந்தா தட்டு, ஜிலேபி, அதுக்குப் பின்னாடி மெசேஜ்னு முன்னாடியே யோசிச்சிப் போட்டுருப்பாரு.
அதுவும் கரெக்டா 31ம் தேதி ரீச்சாகுற மாதிரி அனுப்பிருக்காரு. இதே மாதிரிதான் அவரு படத்துக்கும் உழைச்சிருப்பாரு. நான் எப்பவுமே அவருக்கிட்ட சொல்றது இதுதான். நீங்க ஆக்சுவலி அடைய வேண்டிய எல்லைகள் மிகப்பெரிசு. ஆனா அது கிடைக்கலேங்கறதுக்காக நிக்காம தனக்கு என்ன வருமோ அதுல தொடர்ந்து பயணிப்பேன்.
அதுல யாரைப் பற்றியும் ஒர்ரி பண்ணிக்க மாட்டேன்னு போய்க்கிட்டே இருக்காரு. அல்டிமேட் கிரியேட்டிவிட்டின்னா அவரு மட்டும்தான். அவருடைய இந்தப் படமும் சிறப்பா இருக்கும்னு நினைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவரது அசிஸ்டண்ட் தான் விஜய் கார்த்திகேயன். தற்போது திரையரங்கில் ஓடிக்கொண்டு இருக்கும். மேக்ஸ் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- Tags
- பார்த்திபன்