ரியாலிட்டி ஷோவில் நடுவராக களமிறங்கும் பார்த்திபன்! அட இந்த நிகழ்ச்சிக்கா?

parthiban
மக்களை சந்தோஷப்படுத்த பல தொலைக்காட்சி நிறுவனங்கள் புதுமையான நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றன. மக்களையும் உற்சாகப்படுத்த வேண்டும். அதே நேரம் குழந்தைகளையும் ஈர்க்க வேண்டும். இப்படி எல்லாவித சவால்களையும் எதிர்கொண்டு அதையும் மீறி சில நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் வெற்றி அடைந்து வருகின்றன. குறிப்பாக ஜீ தமிழ் மற்றும் விஜய் தொலைக்காட்சி ஆகியவை இந்த விஷயத்தில் போட்டி போட்டு வருகின்றன.
ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் மட்டும் தான் எண்ணற்ற ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தன. அதனாலேயே மற்ற தொலைக்காட்சிகளை விட விஜய் தொலைக்காட்சிக்கு இன்று வரை ரசிகர்கள் ஏராளமாக இருக்கின்றனர். இப்போது அதற்கு இணையாக போட்டி போடும் தொலைக்காட்சி நிறுவனம் ஜீ தமிழ். இந்த நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதியதாக ஒரு நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளன.
சிங்கிள் பசங்க என பெயரிடப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் பார்த்திபன் நடுவராக வர உள்ளார் என்ற ஒரு தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. அவருடன் இணைந்து சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா மற்றும் பாலிவுட் பிக் பாஸ் புகழ் ஸ்ருதிஹா அர்ஜுன் ஆகியோரும் நடுவர்களாக இணைய உள்ளனர். ஆல்யா மானசாவுக்கும் ஸ்ருதிகா அர்ஜுனுக்கும் ஏற்கனவே ரசிகர் பட்டாளங்கள் இருக்கின்றனர்.
இதில் பார்த்திபன் இணைந்து இருப்பது முற்றிலும் வித்தியாசமாகவே பார்க்கப்படுகிறது. அதனால் இது எப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியாக இருக்கும் என்பதை பார்க்கவே ரசிகர்கள் ஆர்வமாக காத்துக் கொண்டிருக்கின்றனர். பார்த்திபனை பொறுத்த வரைக்கும் அவர் ஒரு வார்த்தை வித்தகர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. இப்படி இருக்கும் பொழுது அவர் ரியாலிட்டி ஷோவில் நடுவராக பங்கு கொள்வது மிகவும் எதிர்பார்க்கப்படும் விஷயமாகவே தெரிகிறது.

alyamanasa
ஆல்யா மானசாவை பொறுத்தவரைக்கும் முதலில் விஜய் தொலைக்காட்சி அதன் பிறகு சன் தொலைக்காட்சி இப்போது ஜீ தமிழ் என ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனமாக மாறி மாறி வருகிறார். ஸ்ருதிஹா அர்ஜுனும் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர். அதன் பிறகு ஹிந்தியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஒட்டுமொத்த இந்தியர்களையும் ஈர்த்தவர். அவரும் இப்போது இந்த நிகழ்ச்சியில் நடுவராக இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகவே பார்க்கப்படுகிறது .இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிறு கிழமைகளில் ஒளிபரப்பாகும் என சொல்லப்படுகிறது.