ஒரே வெயில்.. காலில் சுளுக்கு!. மோனிகாவுக்காக எல்லாம் செய்தேன்!. பூஜா ஹெக்டே ஃபீலிங்..

By :  MURUGAN
Published On 2025-07-18 11:05 IST   |   Updated On 2025-07-18 11:05:00 IST

Coolie Monica: தெலுங்கில் பல படங்களிலும் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் பூஜா ஹெக்டே. ஒருகட்டத்தில் தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையாகவும் மாறினார். நம்பர் ஒன் இடத்தை பிடிப்பதில் இவருக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் இடையே பெரிய போட்டியே இருந்தது. கடந்த சில வருடங்களில் பூஜா ஹெக்டே நடிப்பில் வெளியான படங்கள் வெற்றி பெறவில்லை.

ஆச்சார்யா, ராதே ஷ்யாம், பீஸ்ட், ஹிந்தியில் நடித்த Housefull 4, Kisi Ka Bhai Kisi Ki Jaan, Deva போன்ற படங்கள் பெரிய ஹிட் அடிக்கவில்லை. சூர்யாவுடன் நடித்த ரெட்ரோ படத்தின் பூஜாவின் நடிப்பை பலரும் பாராட்டினாலும் படம் சூப்பர் ஹிட் அடிக்கவில்லை. எனவே, ஒரு நல்ல வெற்றிக்காக காத்திருக்கிறார் பூஜா ஹெக்டே.


ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கிறார். இது விஜயின் கடைசிப்படம் என சொல்லப்படுகிறது. இந்த படம் 2026 பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. ஒருபக்கம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்தில் மோனிகா என்கிற பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.

இந்த பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இந்த பாடலில் பூஜா ஹெக்டேவுடன் மலையாள நடிகர் சௌபின் சாஹிரும் நடனமாடியிருந்தார். அவரின் நடனத்தையும் பலரும் பாராட்டி வருகிறர்கள். இந்நிலையில், மோனிகா பாடலில் நடனமாடியது பற்றி பேசியுள்ள பூஜா ஹெக்டே ‘மோனிகா பாடல் மீதான உங்கள் அன்புக்கு நன்றி. என் சினிமா அனுபவத்தில் இந்த பாடல் மிகவும் கடினமாக இருந்தது. அதிக வெயில், அதனால் வந்த சரும பிரச்சனை, கால் சுளுக்கு, இதையெல்லாம் தாண்டி வசீகர தோற்றம் இருக்க வேண்டும் என்பதற்காக அனைத்தையும் அர்ப்பணித்தேன். கண்டிப்பாக தியேட்டரில் பார்க்கும்போது அற்புதமான அனுபவமாக இருக்கும்’ என பேசியிருக்கிறார்.

Tags:    

Similar News