ஹோலி கொண்டாட சொன்னா.. உனக்கு யாரும்மா கண்ட இடத்துல நலங்கு வச்சுருக்கா?.. பூனம் பஜ்வா பரிதாபங்கள்!

நடிகை பூனம் பஜ்வா ஹோலி கொண்டாடிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பூனம் பஜ்வா 2005ம் ஆண்டில் வெளியான மொடதி என்ற தெலுங்கு படம் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். மேலும், தமிழில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் பரத் நடிப்பில் வெளியான சேவல் படத்தில் நடித்திருந்தார்.
அதை தொடர்ந்து, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோஹி, தம்பி கோட்டை உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார். பூனம் பஜ்வா தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்தார். இந்நிலையில் தமிழ் சினிமாவில் பூனம் பஜ்வாவின் மார்க்கெட் குறைய தொடங்கியதால் தொடர்ந்து சில வருடங்களாக அவருக்கு படங்களில் சிறிய கதாப்பாத்திரங்களே அமைந்து வருகிறது.
ஆம்பள, ரோமியோ ஜூலியட் ஆகிய படங்களில் சைடு ரோலில் நடித்துள்ளார். மேலும், 2020ம் ஆண்டு பூனம் பஜ்வா தான் இயக்குனர் சுனீல் ரெட்டியுடன் ரிலேஷன்சிப்பில் இருப்பதாக தனது இன்ஸ்டாகிராமில் அறிவித்திருந்தார்.
அதை தொடர்ந்து தற்போது ஹோலி பண்டிகையை முன்னிட்டு வெள்ளை நிற பாவாடை மற்றும் ஜாக்கேட் அணிந்து வண்ணம் பூசிக்கொண்டு கூலர்ஸுடன் படு கிளமரான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.அந்த பதிவிற்கு ரசிகர்கள், செக்ஸி குயின், கார்ஜியஸ், பியூட்டி என பல கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும், ஹோலி கொண்டாட சொன்னா உடம்பு முழுக்க உனக்கு யாரும்மா நலங்கு வச்சது என்றும் கிண்டல் கமெண்ட்டுகளையும் பதிவிட்டு பூனம் பஜ்வாவை பங்கம் பண்ணியுள்ளனர். இன்ஸ்டாகிராமை வைத்தே பல நடிகைகள் பொழப்பு ஓடிக் கொண்டிருப்பது போல இவரது பொழப்பும் இதை நம்பித்தான் ஓடுது என்றும் ட்ரோல்கள் பறக்கின்றன.