பிரபுதேவாவையேக் கடுப்பேற்றிய இயக்குனர்... படத்தோட பேரே அப்படி இருக்குதே... என்னத்தச் சொல்ல?

வெறும் நடனத்தில் மட்டும் ஆர்வம் கொண்டு நடன இயக்குனராக வலம் வந்தார் பிரபுதேவா. அவ்வப்போது சில படங்களில் சிறப்பு நடனம் ஆடிவிட்டுச் சென்றார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இவர் தான் என்றார்கள். அதன்பிறகு நடிப்பின் மேல் ஆர்வம் கொண்டு இயக்குனர் ஷங்கரின் காதலன் படத்தில் நடித்தார். அது சக்கை போடு போட்டது.

படத்தில் அவருடைய நடனத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தது. நடிப்பும் நல்லா வரவே பல படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். அப்புறம் இயக்குனராகவும் அவதாரம் எடுத்து வெற்றி பெற்றார். தளபதி விஜயின் போக்கிரி படத்துக்கு இவர் தான் இயக்குனர். அப்புறம் மீண்டும் நடிப்பின் பக்கமே தலைகாட்டியுள்ளார்.

நடிகர் பிரபுதேவா தளபதி விஜயுடன் இணைந்து கோட் படத்தில் நடித்தார். படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் கிடைத்தன. ஆனாலும் பிரபுதேவாவுக்கு தொடர்ந்து பல படங்கள் கையில் உள்ளன. அவர் தான் கால்ஷீட் கொடுக்க முடியாமல் திணறுகிறார். படங்கள் நிறைய நடிக்கிறாரே தவிர எதுவும் வந்தபாடில்லை. அதுக்கு என்ன தான் காரணம்னு பார்த்தால் நமக்கே தலைசுற்றுகிறது. இதுபற்றி வலைப்பேச்சு டீம் அலசுகிறது. அதில் குறிப்பாக சக்திவேல் என்ன சொன்னாருன்னு பார்க்கலாமா...

பிரபுதேவா நிறைய படங்கள்ல கமிட் ஆகிறாரு. ஆனா சூட்டிங்ல தாமதமாகுது. இல்லன்னா வேறொரு பிரச்சனை வந்துடுதாம். ராஜா சரவணன்கற ஒரு டைரக்டர் பிரபுதேவாவை வைத்து 'சிங்காநல்லூர் சிக்னல்' என்ற படத்தை ஆரம்பிச்சாங்க. படத்துக்கு மியூசிக் யுவன் சங்கர் ராஜா. அவரை கமிட் பண்றதுக்காக துபாய்க்கே போனாங்களாம்.


படத்தை ஆரம்பிச்சி ரெண்டு வாரம் போனாங்க. ஆனா சூட்டிங் நடக்கவே இல்லை. என்னன்னா டைரக்டருக்கும், பிரபுதேவாவுக்கும் பிரச்சனை. அவரு ஒழுங்கா ஷெடுல் போடலன்னதும் பிரபுதேவா டென்ஷன் ஆகிட்டாரு. 'எனக்கு ஏகப்பட்ட படங்கள் இருக்கு. நீங்க இப்படி பண்ணினீங்கன்னா நான் எப்படி மத்த படத்துக்குப் போறது? டக்குன்னு முடிங்க. இல்லன்னா நாலு மாசம் கழிச்சித் தான் டேட் கொடுப்பேன்'னு சொல்லிருக்காரு.

ஆனாலும் ஷெடுல் ஒழுங்கா போடல போல. பிரபுதேவா வேறொரு படத்துக்குப் போயிட்டாரு. இப்போ அந்தப் படம் அப்படியே நிக்குது. அடுத்தடுத்து போகுதா? இல்ல எடுக்கப் போகலயான்னு தெரியல. இப்படி ஒரு பிரச்சனை இருக்குன்னு சொல்றாங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் சிங்காநல்லூர் சிக்னல் படம் பேரு. அது ரெட்ல இருக்கு. கிரீனுக்கு மாறுனா சரியா ஆயிடும்னும் கலாய்க்கிறார்கள்.

Related Articles
Next Story
Share it