இரண்டாவது மாநாட்டை எதிர்நோக்கி! மாறப்போகும் விஜயின் இமேஜ்.. பிரேமலதா கொடுத்த பிரஷர்

vijay
விக்கிரவாண்டியில் ஒரு பெரிய மாநாட்டை நடத்தி மற்ற அரசியல் தலைவர்களுக்கு ஜெர்க் கொடுத்தார் நடிகரும் தவெக தலைவருமான விஜய். இதுவரை திமுக அதிமுக என இரண்டு கட்சிகள் மட்டுமே கோலோச்சி இருந்த நிலையில் கட்சி ஆரம்பித்த குறுகிய காலத்தில் ஒரு மூன்றாவது கட்சியாக மிகவும் வலிமையாக வந்து நிற்கிறது விஜயின் தவெக கட்சி. இந்த நிலையில் அவருடைய இரண்டாவது மாநாடு பற்றி தான் தற்போது செய்திகள் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. அவருடைய இரண்டாவது மாநாட்டை மதுரையில் நடத்த திட்டமிட்டு இருக்கிறார் விஜய் .
முதலில் இந்த மாதம் 25ஆம் தேதி மாநாட்டை நடத்துவதாக திட்டமிடப்பட்டது. ஆனால் அந்த தேதியில் இருந்து தற்போது பின்வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 25ஆம் தேதி அவர் தேர்ந்தெடுத்ததற்கு என்ன காரணம் என்பதை பற்றியும் அதற்கு பின்னணியில் என்ன நடந்தது என்பதை பற்றியும் மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு அவருடைய youtube சேனலில் விளக்கமாக கூறியிருக்கிறார். ஆகஸ்ட் 25 என்பது விஜயகாந்த் பிறந்தநாள் மற்றும் விஜயின் திருமண நாள் இரண்டும் ஒரே தேதியில் வருவது கூடுதல் சிறப்பு.
அந்த தேதியில் விஜயகாந்தின் சொந்த மண்ணான மதுரையில் நடத்துவது பொருத்தமாக இருக்கும் என எண்ணி தான் விஜய் அந்த தேதியை தேர்ந்தெடுத்துருப்பார். ஆனால் இப்போது 21ஆம் தேதி அந்த மாநாட்டை தள்ளி வைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து அவருடைய உடல் நலம் குறித்து விசாரித்தார். பிரேமலதா ஸ்டாலின் சந்திப்பு ஒரு வேலை கூட்டணிக்காக இருக்குமோ என பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். ஆனால் அந்த சந்திப்பில் விஜய் அவருடைய இரண்டாவது மாநாட்டை 25ஆம் தேதி நடத்தக் கூடாது, அப்படி நடத்தினால் விஜயகாந்தின் ஒட்டுமொத்த ஓட்டும் விஜய்க்கு சென்று விடும்.
அதனால் அந்த தேதியில் நடத்தாமல் முதலமைச்சருக்கு பிரஷர் கொடுத்திருக்கலாம் என தெரிகிறது .இதை செய்யாறு பாலு அவருடைய பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும் விஜயின் தொண்டர்கள் பல பேர் செப்டம்பர் 17ஆம் தேதி மாநாட்டை நடத்த வலியுறுத்தி வருவதாகவும் கூறுகிறார்கள். ஏனெனில் செப்டம்பர் 17 என்பது பெரியாரின் பிறந்த நாள். அது மட்டுமல்ல அதே தேதியில் தான் திமுக ஒரு மாநாட்டையும் நடத்த திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்கு எதிராக நம்முடைய மாநாட்டை நடத்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என தவெக தொண்டர்கள் வலியுறுத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் இதற்கு விஜய் ஒருபோதும் சம்மதிக்க மாட்டார் என்றே தெரிகிறது. அது மட்டுமல்ல செப்டம்பர் 17ஆம் தேதியிலிருந்து தான் அவருடைய நடைபயணம் மக்கள் பயணம் தொடரவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது .ஆனால் விஜயின் ஒரே எண்ணம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது தான். சரியாக இன்னும் எட்டு மாதங்களே உள்ளன. அப்படி இருக்கும் சூழ்நிலையில் இன்னும் விஜய் மக்களை போய் நேரடியாக சந்திக்கவில்லை .எட்டு மாதத்திற்கு ள் ஒருவர் முதலமைச்சராக முடியுமா என்பதிலும் சந்தேகமாக இருக்கிறது.
ஏனெனில் ஜெயலலிதாவை எடுத்துக் கொண்டால் முதலில் அடிப்படை உறுப்பினராக இருந்து அதன் பிறகு கட்சியில் முக்கிய பொறுப்பிலும் இருந்து சட்டமன்ற தொகுதியை எதிர்கொண்டு இப்படி படிப்படியாக முன்னேறி தான் முதலமைச்சராக மாறினார். அதுபோல ஸ்டாலினும் எளிதாக முதலமைச்சராக இல்லை .கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தும் அவரை உடனே முதலமைச்சர் சீட்டில் அமர வைக்கவில்லை .அதனால் விஜயும் இந்த எட்டு மாதத்திற்குள் முதலமைச்சராகிவிட முடியும் என்ற எண்ணத்தையும் கைவிட வேண்டும் .முதலில் அவர் மக்களை போய் சந்தித்து பேச வேண்டும். எப்படியும் செப்டம்பர் மாதத்தில் அவருடைய நடை பயணம் அந்த மக்கள் பயணம் தொடர்ந்தால் தான் அது சட்டமன்ற தேர்தலில் அவருக்கு சாதகமாக இருக்கும் என செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.