மூன்றாம்பிறை கிளைமேக்ஸ் கமல் லெவலுக்கு தள்ளப்பட்ட தயாரிப்பாளர்... விஜய் அம்மாவா இப்படி பண்ணினது?
விஜய் அம்மா ஷோபா ஒரு லட்சம் அட்வான்ஸ் வாங்கிட்டு கடைசியில என்னை யாருன்னே தெரியலயேன்னு சொல்லிட்டாங்க என்கிறார் தயாரிப்பாளர் பாலாஜி பிரபு. தொடர்ந்து இதுகுறித்து என்ன சொல்கிறார்னு பார்க்கலாம்.
20 வருஷத்துக்கு மேல என் மனசுல காயமாகவே இருந்துக்கிட்டு இருக்கு. அந்த விஷயத்தை நான் சொல்லவே வேணாம்னு இருந்தேன். ஆனா இன்னைக்கு சொல்றேன் என பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சொல்கிறார். வாங்க பார்க்கலாம்.
தளபதி விஜயின் 5வது படம் விஷ்ணு. அதற்கு முன்னர் அவரது தந்தையார்தான் அவரை வைத்துப் படம் தயாரித்து இயக்குகிறார். நாளைய தீர்ப்பு, ரசிகன், செந்தூரப்பாண்டி, தேவா ஆகிய படங்கள். அதற்குப்பிறகு வெளி தயாரிப்பாளர் எடுத்த முதல் படம்னா அது எங்க படம்தான். அதுதான் விஷ்ணு. 3 லட்ச ரூபா சம்பளம்.
1 லட்ச ரூபா அட்வான்ஸ் கொடுத்தோம். 60 சதவீதத்துக்கு மேல மூணாறுல தான் நடந்துச்சு. எஸ்.ஏ.சந்திரசேகர்தான் இயக்கினார். விஜயும், ஷோபா அம்மாவும் தொட்டபெட்ட ரோட்டு மேல முட்டைப் பரோட்டோ, தொட்டுக்கொள்ள சிக்கன் தரட்டான்னு பாடிருப்பாங்க. பயங்கர ஹிட். அந்தப் படம் எடுத்த வகையில லாபம்தான். பெரிய வெற்றிப்படம். அந்தக் காலத்தில் சில விஷயங்கள் நடந்தது.
அங்கே விஜயவாஹினி ஸ்டூடியோவுல தான் விஷ்ணு படப்பிடிப்பு நடந்தது. ஷோபா அம்மாவே அவங்க கையால சமைச்சிக் கொண்டு வந்து பரிமாறுவாங்க. நாட்டுக்கோழி, மட்டன், எல்லாமே கொண்டு வருவாங்க. அன்பா பரிமாறுவாங்க. அப்போ எனக்கு 24 வயசுதான். நல்ல சாப்பிடுன்னு சொல்வாங்க.
எனக்கு சளித்தொல்லையா இருக்கும். நாளைக்கு வீட்டுக்கு வா. நண்டு ரசம் வச்சித்தாரேன்னு சொன்னேன்னு சொன்னாங்க. நானும் ஞாயிற்றுக்கிழமை போனேன். நண்டு ரசம் மிளகு போட்டு தூக்கலா வச்சித் தந்தாங்க. சூப்பரா இருந்துச்சு. அடுத்த பட அட்வான்ஸாக ஒரு லட்சத்தைக் கொடுக்குறோம்.
அப்போ விஜய், ஷோபா, எஸ்ஏ.சந்திரசேகர் 3 பேரும் சேர்ந்து அப்பாகிட்ட வாங்கினாங்க. அப்போ அப்பா அண்ணேன் சீக்கிரமா கொஞ்சம் பண்ணிக்கொடுங்கன்னு சொன்னாங்க. விஷ்ணு படத்தின் மூலமா விஜய்க்குக் கொடுத்த வாழக்கையை அந்த நன்றியை என்னைக்குமே மறக்க மாட்டோம். நிச்சயமா உங்களுக்கு சீக்கிரமா படத்தைப் பண்ணிக் கொடுக்கச் சொல்றேன்னு சொன்னாங்க.
அப்போ விஜய் வரிசையாக படங்கள் கமிட் ஆகியிருந்தாரு. அதனால எங்க படத்துக்குக் காலம் தாழ்த்தப்பட்டது. ஆரம்பத்துல எங்களை டபுள் பாசிடிவ் பார்க்கும்போது கரெக்ஷன் பண்ண வரச் சொன்னாங்க. அப்போ அப்பா விஜய்க்கிட்ட ஒரு கால்ஷீட் சம்பந்தமா லட்டர் எழுதிக் கொடுத்தாரு. எதற்குமே பதில் இல்லை. அப்பாவும், விஜயும் பதில் சொல்லவே இல்லை. அதனால ஷோபா அம்மாகிட்ட பேசுன்னு அப்பா சொன்னாங்க.
நானும் போன்ல பேசினேன். நான் நடந்த விஷயங்களை எல்லாம் அவரிடம் சொல்றேன். ஆனால் அவங்க எனக்கு ஞாபகம் இல்லைங்கன்னு தான் சொல்றாங்க. விஷ்ணு படம், அட்வான்ஸ் கொடுத்தது என எல்லாத்தையும் ஞாபகப்படுத்திப் பார்த்தாலும் சரியா ஞாபகம் இல்லைன்னு சொல்லிட்டாங்க.
நண்டுரசம்னு எல்லாத்தையும் சொல்லிப் பார்த்தாலும் அது பலருக்கு வச்சிக் கொடுத்துருக்கேன். நீங்க யாருன்னு தெரியலையேன்னு சொல்லிட்டாங்க. கடைசியில எனக்கு மூன்றாம்பிளை கிளைமேக்ஸ் கமல் மாதிரி ஆகிடுச்சு. கடைசியில் விஜய் வீட்டு டிரைவரிடம் ஒரு லட்ச ரூபாயைக் கொடுத்து அப்பாவிடம் அனுப்பியுள்ளார் எஸ்ஏசி. அது எப்படி ஒரு டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து அனுப்பலாம்னு கோபத்தில் எஸ்ஏசியிடம் போனில் எகிறி பேசிவிட்டு அந்தப் பணத்தை வாங்காமல் திரும்பவும் அந்த டிரைவரிடமே பணத்தைக் கொடுத்து விட்டார்.
முதல்ல யாருன்னே தெரியாதுன்னு சொன்னவங்க தெரிஞ்சதால தான ஒரு மணி நேரத்துல டிரைவரிடம் பணத்தைக் கொடுத்து அனுப்புறாங்க. சினிமா உலகில இது எல்லாம் நடக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.