யாரா இருந்தாலும் நோ!.. டாப் நிறுவனத்துக்கே டாடா காட்டிய வெற்றிமாறன்.. புகழ்ந்த தாணு!..

by Murugan |   ( Updated:2025-01-02 04:47:04  )
யாரா இருந்தாலும் நோ!.. டாப் நிறுவனத்துக்கே டாடா காட்டிய வெற்றிமாறன்.. புகழ்ந்த தாணு!..
X

dhanu

இயக்குனர் வெற்றிமாறன்: தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான இயக்குனர்களின் ஒருவர் இயக்குனர் வெற்றிமாறன். தன்னுடைய வித்தியாசமான படைப்புகளால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி வைத்திருக்கின்றார். இவரின் திரைப்படங்கள் என்றாலே அதை நிச்சயம் வெற்றி படமாக தான் இருக்கும் என்கின்ற நம்பிக்கை ரசிகர்களிடையே இருக்கின்றது.

இவர் இயக்கிய கடைசி திரைப்படம் விடுதலை 2. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளிவந்த விடுதலை திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து விடுதலை 2 திரைப்படத்தை இயக்கினார் வெற்றிமாறன். விடுதலை திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இயக்கப்பட்டு இருந்த நிலையில் 2வது பாகம் முழுக்க முழுக்க நடிகர் விஜய் சேதுபதியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.


படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. மேலும் வசூல் ரீதியாகவும் சற்று தோல்வியை சந்தித்து இருக்கின்றது. வெற்றிமாறன் இயக்கிய படங்களிலேயே முதல் தோல்வி என்பது விடுதலை 2 திரைப்படத்திற்கு தான். இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக வாடிவாசல் திரைப்படத்தை இயக்குவதற்கு தயாராகி வருகின்றார். இந்த திரைப்படம் மூன்று பாகங்களாக வெளியாக இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது.

மூன்று பாகத்திற்கும் தேவையான அனைத்து கதைகளும் தயார் நிலையில் இருப்பதாகவும், விரைவில் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரிக்கின்றார். பல வருடங்களுக்கு முன்பே இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் சில பல காரணங்களால் படப்பிடிப்பு நடக்காமல் இருந்து வந்தது. இதனால் பலரும் படம் டிராப் ஆகிவிட்டது என்று கூறினார்கள்.

ஆனால் இப்படம் நிச்சயம் வரும் என வெற்றிமாறன் கூறியிருந்தார். அதேபோல் தற்போது விடுதலை படத்தின் பாகங்களை முடித்த கையோடு வாடிவாசல் படத்திற்கான வேலையை தொடங்கி இருக்கின்றார். இந்த தகவலை தயாரிப்பாளர் தாணு உறுதி செய்து இருக்கின்றார். நடிகர் சூர்யா தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருவதால் இதை இரண்டையும் முடித்துவிட்டு வாடிவாசல் திரைப்படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட தயாரிப்பாளர் தாணு வாடிவாசல் திரைப்படம் குறித்து பேசி இருந்தார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது' படம் ஆரம்பிக்கப்பட்ட சிறிது நாட்களிலேயே படத்தின் ஆடியோ உரிமை 10 கோடிக்கு விற்பனையானது. அதனை இப்போது விற்பனை செய்தால் மேலும் பல கோடிக்கு விற்பனையாகலாம். விடுதலை திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோது இயக்குனர் வெற்றிமாறனுக்கு பல ஆபர்கள் வந்தது.




தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இருந்து பெரிய பெரிய நிறுவனங்கள் அவரை அணுகினார்கள். ஆனால் அவர்கள் அனைவரிடத்திலும் வெற்றிமாறன் சொன்ன ஒரே வார்த்தை வாடிவாசல் திரைப்படம் முடிந்த பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்பதுதான். அவர் மீது எனக்கு ஏகப்பட்ட நம்பிக்கை இருக்கின்றது. நடிகர் சூர்யாவும் சூர்யா 45 படத்தை முடித்த கையோடு வாடிவாசல் திரைப்படத்தில் நடிக்க வந்து விடுவார். இதற்கான பேச்சு வார்த்தையை நாங்கள் நடத்திக் கொண்டிருக்கின்றோம்' என்று அந்த பேட்டியில் தெரிவித்து இருக்கின்றார்.

Next Story