கூலி கடைசி நாள் ஷூட்டிங்கில் ரஜினி செய்த சம்பவம்!.. நெகிழ்ந்து பேசிய நாகார்ஜுனா!..

by Murugan |
coolie
X

Coolie: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, நாகார்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், சௌபின் சாஹிர் உள்ளிட்ட பலரும் நடித்து உருவாகியுள்ள கூலி திரைப்படம் வருகிற 14ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. எனவே புரமோஷன் பணிகள் சூடுபிடித்திருக்கிறது. கடந்த 2ம் தேதி சென்னையில் இசை வெளியிட்டு விழா நடந்தது.

இந்த விழாவில் ரஜினி பேசியது ஹைலைட்டாக அமைந்தது. இந்த விழாவில் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதிஹாசன்,லோகேஷ் கனகராஜ், கலாநிதி மாறன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இப்படத்தின் 3 பாடல்களும் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

இப்படத்தின் வில்லனாக நாகார்ஜுனா நடித்திருக்கிறார். இதுவரை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நாகார்ஜுனா நடித்ததில்லை. இப்படத்தின் தெலுங்கு புரமோஷன் நிகழ்ச்சி நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் ரஜினியை தவிர மற்றவர்கள் கலந்துகொண்டனர். ஆனால் ரஜினி வீடியோ காலில் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய நாகார்ஜுனா ’கூலி படத்தின் கடைசி நாள் ஷுட்டிங்கில் ரஜினி சார் இப்படத்தில் பணியாற்றிய சுமார் 350 பேரை அழைத்து, அவர்களுடைய கையில் குறிப்பிட்ட தொகையை கொடுத்து ‘உங்கள் குழந்தைகளுக்கும், வீட்டிற்கும் ஏதாவது வாங்கி செல்லுங்கள் என சொன்னார்’ என கூறினார்.

Next Story