ரஜினிக்கும் கமலுக்கும் வணிக ரீதியில் பெரிய வெற்றியை கொடுத்தவர்.. இது யாருக்காவது தெரியுமா?

By :  ROHINI
Update: 2025-05-11 10:57 GMT

rajinikamal

RajiniKamal: ரஜினியை வைத்து பில்லா உள்ளிட்ட பல படங்களை தயாரித்த நடிகர் கே பாலாஜி. இவருக்கு பிறகு அவருடைய குடும்பத்தினர் ஏதேனும் படங்களை தயாரித்தார்களா இல்லை என்றால் ஏன் அவர்கள் பட தயாரிப்பில் இறங்கவில்லை என்ற ஒரு கேள்வி ரசிகர் கேட்க அதற்கு வலைப்பேச்சு பிஸ்மி அவருடைய பதிலை கூறியிருக்கிறார் .பில்லா திரைப்படத்திற்கு பிறகு அவருடைய குடும்பத்தினர் பட தயாரிப்பில் இறங்கினார்கள் .அஜித்தை வைத்து கிரீடம் திரைப்படத்தை அவர்கள் தான் எடுத்தார்கள்.

மலையாளம் கிரீடம் படத்தின் ரீமேக் தான் தமிழில் எடுக்கப்பட்டது .அதைப்போல கமல் நடித்த பாபநாசம். இதுவும் மலையாள படத்தின் திருஷ்யம் படத்தின் ரீமேக். பாபநாசம் படத்தையும் பாலாஜி குடும்பத்தினர் தான் எடுத்தார்கள். மொத்தத்தில் சில படங்களை எடுத்தார்கள் .அதே நேரம் பாலாஜி மாதிரி தொடர்ந்து அவருடைய குடும்பம் பட தயாரிப்பில் ஈடுபடவில்லை.

பாலாஜி படம் என்றாலே கண்டிப்பாக ஜனவரி 26 ஆம் தேதி வெளியாகிவிடும். ஜனவரி 26 என்றாலே பாலாஜியின் ஒரு படம் வெளியாகும் என நாம் முடிவு செய்து கொள்ளலாம். பாலாஜியின் பெரும்பாலான படங்கள் ஹிந்தி ரீமேக் ஆகத்தான் இருக்கும் .அதிலும் ஹிந்தியில் வெளியாகி பட்டய கிளப்பிய திரைப்படங்களை தேடி தேடி எடுத்து அதனுடைய ரைட்ஸை வாங்கி இங்கு அந்த படத்தை ரீமேக் செய்து விடுவார்,

சொல்லப்போனால் ரஜினிக்கும் கமலுக்கும் வணிக ரீதியில் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுத்தவர் யார் என்றால் கே. பாலாஜி தான். இதில் இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவெனில் பாலாஜி படத்தின் ஏதாவது ஒரு காட்சியிலாவது பாலாஜி வந்து விடுவார். அதனால் அவருடைய படங்கள் வெளியாகும் போது இந்த படத்தில் பாலாஜி என்ன மாதிரியான கேரக்டரில் வருவார் என நமக்கு ஒரு ஆர்வத்தை தூண்டிவிடும்.

balaji

சில படங்களில் ரோலிங் சேரில் உட்கார்ந்து பாலாஜி அப்படியே திரும்புவார். உடனே டைட்டில் கார்டில் கே பாலாஜி என போடப்படும். ஆனால் பாலாஜியை பொருத்தவரைக்கும் அவரை ஒரு நடிகராக தான் அனைவருக்கும் தெரியும். அவருடைய குடும்ப பின்னணியை கேள்விப்பட்டால் நமக்கே ஆச்சரியம் வந்துவிடும். ஒய் ஜி மகேந்திரனின் அம்மா பாலாஜியின் சகோதரி தான் இவருடைய குடும்ப உறுப்பினர்களை ஆராய்ந்து பார்த்தோமானால் மரங்களில் எவ்வளவு கிளைகள் இருக்கிறதோ அந்த மாதிரி பெரிய லிஸ்ட்டே போய்க்கொண்டிருக்கும். அதைப்போல மோகன்லாலின் மாமனாரும் கே பாலாஜி தான். இவருடைய மகளை தான் மோகன் லால் திருமணம் செய்து இருக்கிறார் .இப்படி நிறைய விஷயங்கள் பாலாஜியை பற்றி இருப்பதாக வலைப்பேச்சு பிஸ்மி கூறி இருக்கிறார்.

Tags:    

Similar News