கூலிதான் முதல் படமா?.. A சர்ட்டிபிகேட் வாங்கிய ரஜினி படங்களின் லிஸ்ட்...

Coolie:திரைப்படங்களை தணிக்கை செய்யும் சென்சார் போர்டு ஒவ்வொரு படத்திற்கும் அதன் தன்மைக்கு ஏற்ப A, U/A, U என ஏதேனும் ஒரு சான்றிதழை கொடுக்கிறது. அதை வைத்து அது என்ன மாதிரியான திரைப்படம் என ரசிகர்கள் தெரிந்துக் கொள்கிறார்கள். 90 சதவீத படங்களுக்கு UA சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. இந்த வகையான படங்களை எல்லா வயதினரும் பார்க்கலாம். A என்பது அடல்ட்ஸ் ஒன்லி அதாவது 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க வேண்டும் என்பதை குறிக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கூலி படத்திற்கு சென்சார் போர்டு A சான்றிதழ் கொடுத்திருக்கிறது. இது வெளிநாடுகளில் படத்தின் வசூலை பாதிக்கும். ஏனெனில் இந்தியா போல் இல்லாமல் வெளிநாடுகளில் A சான்றிதழ் படங்களை 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே பார்க்க முடியும். இதனால் படம் பார்க்க குடும்பத்துடன் ரசிகர்கள் செல்லமுடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

ஒருபக்கம் ரஜினி நடித்த ஒரு படம் A சான்றிதழ் வாங்கியிருப்பது இதுதான் முதல் முறை. இதற்கு லோகேஷ்தான் காரணம் என சமூகவலைதளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். உண்மையில் கடநத 35 வருடங்களில் ரஜினியின் எந்த படமும் A சான்றிதழ் வாங்கியதில்லை. ஆனால் 80களில் அவர் நடிப்பில் வெளியான நான் சிகப்பு மனிதன், நெற்றிக்கண் போன்ற படங்களும், கடைசியாக 1989ல் வெளியான சிவா படமும் A சான்றிதழ் பெற்றுள்ளது.
தற்போது கூலி படத்துக்கு A சான்றிதழ் கிடைத்தாலும் இது ரஜினி படம் என்பதால் பெரிதாக வசூலை பாதிக்க வாய்ப்பில்லை. சில வெளிநாடுகளில் மட்டுமே பாதிப்பு இருக்கும் என கணிக்கப்படுகிறது. கூலி படம் வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இன்று மாலை 6 மணியளவில் இசை வெளியிட்டு விழா நடைபெறவுள்ளது.