‘கூலி’ படத்தில் ரஜினி நடிக்க ஆசைப்பட்ட கேரக்டர்! லோகி அண்ணே இப்படி பண்ணிட்டீங்களே

by Rohini |
coolie
X

coolie

ரஜினி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரிலீசாக கூடிய திரைப்படம் கூலி. இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் தான் சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் ரஜினி, நாகார்ஜுனா, அமீர்கான் ,உபேந்திரா என படத்தில் நடித்த அத்தனை நடிகர்களும் கலந்து கொண்டு அவரவர் அனுபவங்களை பகிர்ந்தனர். அதில் ரஜினி பேசியது பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரலானது .

அதுமட்டுமல்ல ரஜினி இந்த சினிமா துறைக்கு வந்து 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார். அதுவும் ஒரு சிறப்பாக கருதப்பட்டது. தற்போது படக்குழு ஒவ்வொரு ஊர்களுக்கு சென்று படத்தை பற்றி பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து வருகின்றனர். அதில் நேற்று ஹைதராபாத்தில் லோகேஷ், நாகர்ஜுனா ஸ்ருதிஹாசன் என அனைவருமே படத்தை பற்றி பேசி இருந்தனர்.

அந்த விழாவில் ரஜினி ஒரு வீடியோவில் பேசி அதை led திரையில் ஒளிபரப்பினார்கள். அந்த வீடியோவில் ரஜினி நாகார்ஜுனாவை பற்றி மிகப் பெருமையாக பேசி இருந்தார். அதாவது இந்த படத்தில் சைமன் கேரக்டரில் நாகர்ஜூனா நடிக்கிறார். அதுதான் படத்திற்கு வில்லன் கேரக்டர் .அந்த கேரக்டரை பற்றி முதன் முதலில் லோகேஷ் ரஜினியிடம் தான் விவரித்தாராம்.

அதைக் கேட்டதும் ரஜினிக்கு இந்த கேரக்டரில் நான் நடிக்கிறேன் என கூறி இருக்கிறார் .பொதுவாக ரஜினிக்கு வில்லனாக நடிப்பது என்பது மிகவும் பிடிக்கும் .ஆனால் லோகேஷ் இந்த கேரக்டருக்கு நான் நாகர்ஜுனாவை மனதில் வைத்திருக்கிறேன் என சொல்லிவிட்டாராம். நாகர்ஜுனா என்ற பெயரை கேட்டதும் ரஜினிக்கு ஒரே அதிர்ச்சி. அவர் இதற்கு சம்மதிப்பாரா என கேட்டிருக்கிறார் ரஜினி .

இருந்தாலும் இந்த கேரக்டரை பற்றியும் படத்தின் கதையைப் பற்றியும் நாகார்ஜுனாவிடம் ஏழு முறை லோகேஷ் விவாதித்து இருக்கிறார் .கடைசியாக எப்படியோ நாகார்ஜுனா ஒப்புக்கொண்டாராம். படப்பிடிப்பில் நாகர்ஜுனாவிடம் ரஜினி ‘எப்படி இன்னும் இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள்’ எனக் கேட்டு இருக்கிறார். அதற்கு நாகார்ஜுனா உடற்பயிற்சி, நீச்சல் ,சரியான உணவு முறை, அது மட்டுமல்ல என் அப்பாவிடம் இருந்து வந்த அந்த ஜீன் என கூறினாராம்.

nagarjuna

nagarjuna

ரஜினியும் நாகார்ஜுனாவும் கிட்டத்தட்ட 33 வருடங்களுக்கு பின்பு மீண்டும் இந்த படத்தின் மூலம் இணைந்து நடிக்கின்றனர். இதைப் பற்றியும் ரஜினி பேசும்போது 33 வருடத்திற்கு பிறகு நானும் நாகர்ஜுனாவும் நடிக்கிறோம். அப்போது எப்படி இருந்தாரோ அதே மாதிரி தான் இப்போதும் நாகர்ஜுனாக இருக்கிறார் .ஆனால் எனக்கு முடியெல்லாம் கொட்டி போய்விட்டது. அவருக்கு அப்படியே தான் இருக்கிறது என கூறினார் ரஜினி.

Next Story