தலைவர் செம ஃபாஸ்ட்!. இறுதிக்கட்டத்தில் கூலி ஷூட்டிங்!.. அதிரும் கோலிவுட்!...

Coolie update: நடிகர் ரஜினிகாந்த் இப்போது கூலி படத்தில் நடித்து வருகிறார். கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ என எதிர்பார்ப்பை எகிற வைக்கும் திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் ரஜினி கை கோர்த்திருப்பதால் படத்தின் மீது தாறுமாறான எதிர்பார்ப்பு இருக்கிறது. கண்டிப்பாக இந்த படம் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் ட்ரீட்டாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
கடந்த சில மாதங்களாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது. பல வருடங்களுக்கு பின் ரஜினியுடன் இணைந்து சத்தியராஜும் இப்படத்தில் நடித்துள்ளார். கூலி படத்தை பேன் இண்டியா படமாக மாற்றுவதற்காக தெலுங்கிலிருந்து நாகார்ஜுனா, கன்னட சினிமாவிலிருந்து உபேந்திரா, மலையாள சினிமாவிலிருந்து சௌபின் சாஹிர் ஆகியோரை கூட்டிவந்து நடிக்க வைத்திருக்கிறார்கள்.
அதுபோக ஸ்ருதிஹாசனும் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். வழக்கமாக ஒரு படத்தில் நடித்துமுடித்துவிட்டு சில மாதங்கள் இடைவெளி விடுவார் ரஜினி. ஆனால், வேட்டையன் படத்தை முடித்தவுடனேயே கூலி படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். லோகேஷும் திட்டமிட்டு சரியாக படமெடுப்பவர் என்பதால் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துவிட்டது.

ரஜினியின் காட்சிகள் இந்த வாரம் 4ம் தேதியோடு முடிவதாக இருந்தது. ஆனால், அது நடக்காததால் இன்னும் ஒரு வாரத்தில் அவரின் காட்சிகளை முடித்துவிட்டு மற்ற நடிகர்களின் காட்சிகளை சில நாட்கள் எடுக்க திட்டமிட்டிருக்கிறார் லோகேஷ். அனேகமாக இன்னும் 2 வாரத்தில் கூலி படத்தின் ஷூட்டிங் முழுவதுமாக முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது.
ரஜினி கொடுத்த ஒத்துழைப்பில்தான் படப்பிடிப்பு விரைவாக முடிந்திருப்பதாக சொல்கிறார்கள். ஒருமுறை சண்டை காட்சி எடுக்கும்போது ரஜினி தலை கீழாக தொங்குவது போல் காட்சிகள் எடுக்கப்பட்டு அவரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால், சில நாட்கள் ரெஸ்ட் எடுத்து ரஜினி மீண்டும் நடிக்கப்போனார்.
இந்த படத்தில் பூஜா ஹெக்டே ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடவிருக்கிறார். ஜெயிலர் படத்தில் தமன்னா ஆடியது போல கூலி படத்தில் பூஜா ஹெக்டே ஆடும் பாடலும் ஹிட் அடிக்கும் என்றே கணிக்கப்படுகிறது.