வேணாம்.. ஸ்பேர் பார்ட்ஸ்லாம் கழண்டு போயிடும்.. கூலி ஃபங்சனில் ரஜினி கலகல...

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள கூலி படம் வருகிற 14ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியிட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இந்த விழாவில் ரஜினி, லோகேஷ் கனகராஜ், அமீர்கான்,சத்யராஜ் உள்ளிட்ட பலரும் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய ரஜினி லோகேஷ், நாகார்ஜுனா, சத்யராஜ் என எல்லாரையும் பற்றி பேசினார். தான் ஒரு கமல் ரசிகர் என சொன்ன லோகேஷை கலாய்த்தார். நாகார்ஜுனாவின் தலைமுடி அழகை பற்றி பேசினார். 74 வயதானாலும் இன்னமும் ரஜினி தான் நடிக்கும் படங்களில் ஸ்டாலாக நடனமாடி வருகிறார், வேட்டையன் படத்தில் கூட மனசிலாயோ பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

விரைவில் வெளியாகவுள்ள கூலி படத்தில் சிக்கடு பாடலுக்கு செமயாக நடனமாடியிருக்கிறார். இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் நடன அசைவுகளை அமைத்திருக்கிறார். இந்த படத்தில் வரும் மோனிகா பாடலுக்கும் சாண்டிதான் டான்ஸ் மாஸ்டர். இந்த பாடலில் ஆடிய சௌபின் சாஹிர் உலகளவில் பேமஸ் ஆகிவிட்டார். இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி ரிலீஸ் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கூலிப்பட விழாவில் பேசிய ரஜினி சாண்டி மாஸ்டர் என்னிடம் ‘தலைவா தூள் கிளப்பிடலாம்’ என சொன்னார். நான் அவரிடம் அய்யா நான் 1950 மாடல். பல லட்சம் கிலோமீட்டர் வண்டி ஒடி இருக்கு, ஸ்பேர் பார்ட்ஸ் எல்லாம் மாத்தி இருக்காங்க. ரொம்ப ஆடவச்சிடாதீங்க. ஸ்பேர் பார்ட்ஸ் கழண்டு விடும் என்று சொன்னேன்!’’ என ஜாலியாக பேசினார்.