சோபாவுல உட்கார்ந்து எல்லா சீக்ரெட்டையும் வாங்கிடுவாங்க!.. அலறிய ரஜினி..

by Murugan |
rajini
X

நடிகர் ரஜினி மனதில் பட்டதை பேசும் பழக்கம் கொண்டவர். அப்படி பேசி பலமுறை சர்சையில் சிக்கினார். எனவே மீடியாக்களிடம் அதிகம் பேசக்கூடாது என எப்போதும் எச்சரிக்கையாக இருப்பார். விமான நிலையங்களில் செய்தியாளர்கள் ஏதேனும் கேட்டால் ஒரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். இதை பல வருடங்களாகவே பின்பற்றி வருகிறார்.

அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தபோது ’ஒரு செய்தியாளர் உங்கள் கட்சியின் கொள்கை என்ன என என்னிடம் கேட்டார் தலையே சுத்திடுச்சி’ என ரஜினி சொன்னதை பலரும் ட்ரோல் செய்தார்கள். தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த போது பொதுமக்கள் மீதுதான் தவறு என சொல்லி நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டார். இப்படி பல முறை ரஜினி பேசியது எதிர்ப்பை சந்தித்திருக்கிறது.

எனவேதான் ரஜினி ஊடகங்களுக்கோ, தொலைக்காட்சிகளுக்கோ பேட்டி கொடுக்க மாட்டார். அரிதாகவே பேட்டி கொடுப்பார். இந்நிலையில் நேற்று நடந்த கூலி விழாவில் பேசிய ரஜினி ‘ 5 வருடங்களாக என்னிடம் பேட்டி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் நான் தரவே மாட்டேன். ஏனெனில் சோபா போட்டு உட்கார்ந்து என் வாழ்வின் ரகசியங்கள் எல்லாவற்றையும் வாங்கிவிடுவார்கள்’ என பேசியிருக்கிறார்.

ரஜினியின் கூலி படம் வருகிற 14ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படம் 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story